ஏர்வாடி இபுறாஹிம் ஷஹீது வலியுல்லாஹ் அவர்களின் வரலாற்றின் சிறு சுருக்கம்
12 ம் நூற்றாண்டில் ஒரு நாள் சிலுவைப் போர் வீரர் சுல்தான் சலாஹுதீனின் கீழ் மதினா மாநகரின் கவர்னராக பணியாற்றி வந்த அந்த ஆன்மீகச் செல்வர் உறங்கும் வேளையில் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் கனவில் திருக்காட்சி நல்கி தமிழ்நாடு சென்று தீனுல் இஸ்லாத்தை பரப்புமாறு பணித்து விட்டு மறைந்தார்கள்.. கனவு கண்டு விழித்த அந்த ஆன்மீக செல்வர் இறைவனுக்கு சிரம் தாழ்த்தி இறைத்தூதர் சொன்ன சொல்லை நெஞ்சில் ஏற்று அவர்களும்,துருக்கிய படைத் தளபதியான அப்பாஸ் அவர்களும்,,ஜித்தாவில் ஆளுனராய் இருந்த சிக்கந்தர் துல்கர்னைன் அவர்களும் மேலும் பலரும் தமிழ் நாட்டில் வந்து கரையிறங்கி இஸ்லாமிய பிரச்சாரம் செய்தனர் .. அந்நாளில் பவுத்திர மாணிக்க நகரை ஆண்டு வந்த விக்கிரம பாண்டியன் தன் தம்பி குலசேகர பாண்டியனுக்கு பங்கு கொடுக்காததால் தன் அண்ணன் மீது வெறுப்புற்று இந்த ஆன்மீக செல்வரின் உதவியை வேண்டி அவரையே தூதனுப்பி பேச செய்கிறான்..ஆன்மீக செல்வரும் குலசேகர பாண்டியனின் பரிதாப நிலைக்கண்டு விக்கிரம பாண்டியனிடம் சென்று எவ்வளவு முறையிட்ட போதும் அவன் பங்கு கொடுக்க மறுத்து விடுகிறான். நியாயத்துக்காக போராடி நீங்கள் தான் எனக்கு வழிக...