மும்பை ஹாஜி அலி தர்ஹா ஷரீஃப் !!!
முதஅவ்விதன்!! முபஸ்மிலன்!!! முஹம்திலன்!!! முஸல்லியன் !!!வமுஸல்லிமா!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இது ஹாஜி அலி தர்ஹா. இது மும்பையின் தென்பகுதியில் வோலி குடாவிலுள்ள ஒரு தீவு திடலில் அமைந்துள்ளது. இந்து முஸ்லிம்களை இணைக்கும் பாலமாக இந்த தர்ஹா அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம். . இதில் நல்லடக்கமாகி துயில்பவர்கள் ஸையுதுனா அஸ்ஸையித் பீர் ஹாஜி அலி ஷா புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி. இவர்கள் 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் செல்வந்தர். . எல்லாவற்றையும் துறந்து மக்கா மதீனா சென்று, புஹாரா சென்று புஹாரி நாயகத்தை தரிசித்து உலகின் பல பாகங்களுக்கும் சென்றவர். மீண்டும் மும்பை வந்து தவமியற்றி வாழும்போது சுகவீனமுற்றார்கள். . தன் அன்பர்களிடம் தன்னை மக்கா - மதீனா கொண்டுப் போகும்படி வேண்டினார்கள். இடையில் நடுக்கடலில் இறையடி சேர்ந்தார்கள். எனினும் கடல் அலைகள் இவர்களை மீண்டும் இந்தத் தீவுத் திடலுக்குக் கொண்டு வந்து சேர்த்தன. அவ்விடத்...