பெருமானாரின் மீலாதுப் பெருவிழாக்கள் !!!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அழகங்குளம் முஸ்லீம் பொது ஜன சங்கம் சார்பில் உத்தம திருநபியின் உதய தின விழா 20-2-2011- ஞாயிற்றுக் கிழமை (திங்கள் இரவு) நேரம் இரவு 10-00- மணியளவில், அழகங்குளம் ஜாமிஆ மஸ்ஜித் வளாகத்தில் நடைபெற்றது. சமநிலைச் சமுதாயம் தமிழ் மாத இதழின் ஆசிரியர், சென்னை மௌலானா மௌலவி S-N- ஜாஃப்பர் சாதிக் ஃபாஜில் பாகவி M.A.,M.phil ஹஜ்ரத் அவர்கள்.மற்றும் நாகை மாவட்டம் , புரவாச்சேரி ஜனாப் மௌலானா மௌலவி அல்ஹாஜ் சுபுரிஷா ஃபைஜி ஹஜ்ரத் கிப்லா அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள். துபையில் மீலாதுப் பெருவிழா (20-02-2011) அன்று சிறப்புர நடைபெற்றது. காயல் பட்டிணம் ஜும்ஆப் பள்ளி கதீப் மௌலானா மௌலவி ஹாஃபிழ் அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். குவைத்தில் மீலாது பெருவிழா 18-02-2011 அன்று குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாட்டில் சிறப்புற நடைபெற்றது. நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபுக்கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி முஹம்மது இஸ்மாயில் ஃபாஜில் பாகவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். அபுதாபியில்...