லால்பேட்டையில் புனிதமிகு புஹாரி ஷரீஃப் நிறைவு விழா
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) லால்பேட்டை மாநகரில் நாயகம் (ஸல்) அவர்களின் பொன் மொழிப் பேழையான புஹாரி ஷரீஃப் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் லால்பேட்டை லால்கான் ஜாமிஆ மஸ்ஜிதில் ஜமாத்துல் ஆகிர் பிறை ஒன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் அஸர் தொழுகைக்குப்பிறகும், மஃக்ரிப்தொழுகைக்குப் பிறகும், லால்பேட்டை ஜாமிஆ மத்ரஸா மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் முதல்வர் தலைமையில், ஜாமிஆவின் கண்ணிய மிகு பேராசிரியர்களாலும்,ஜாமிஆவின் மாணவர்களாலும், மற்றும் லால்பேட்டை மாநகர ஜமாஅத்துல் உலமாவைச் சார்ந்தஉலமாப் பெருமக்களாலும் ஓதப்பட்டு, இஷாத்தொழுகைக்குப்பிறகு அன்று ஓதப்பட்ட ஹதீஸ்களின் சாராம்சத்தை உஸ்தாதுமார்களாலும்,மாணவர்களாலும்,உலமாப்பெருமக்களாலும், பயான் செய்யப்படும். இது ஜமாத்துல் ஆகிர் மாதம் முழுவதும் புஹாரி ஷரீஃபின் இரண்டு பாகங்களும் முழுமையாக ஓதி முடிக்கப்பட்டு, நிறைவு விழா ரஜப் பிறை முதல் நாளன்று புஹாரி ஷரீஃபின் கடைசி ஹதீஸை ஓதி முடித்து, பிறகு மீண்டும் ஆரம்ப ஹதீஸை ஓதி துவக்கி வைப்பார்கள். நிறைவு விழாவில் ஜாமிஆவின் முதல்வர்,மற்றும் கண்ணிய மிகு உஸ்தாது மார்களாலும், ...