முகவை தீன்சுடர் தீன் இசைப்பேரரசு அல்ஹாஜ் எஸ்.ஏ.சீனி முகம்மது
இந்தியாவில் தமிழ்நாட்டின் முகவை என்ற இராமநாதபுரத்தில் பிறந்த இஸ்லாமியப்பாடகர்கள் ,இஸ்லாமிய இசைமுரசு ஹாஜி மர்ஹூம் இ.எம். நாஹூர்ஹனிபா,மர்ஹும் எஸ்.எஸ்.ஏ.அப்துல் வாஹித் அவர்களின் காலத்திலேயே தனக்கென தனி இடத்தையும் அவர்களின் அன்பையும் பாராட்டுதலையும் பெற்றதோடுமட்டும் அல்லாமல் காயல் மர்ஹூம் சேக்முகம்மது அவர்களுக்கு இல்லத்திருமணகச்சேரிகளை நடத்தியதுடன் , பாடகர்கள் சேக்முகம்மது மற்றும் அப்துல்வாஹித் அவர்களுடன் இணைந்து பல நூறுமேடைகளில் தன்னுடைய பாடல்களை அரங்கேற்றிய பெருமை தீனிசைப்பேரரசு முகவை ஹாஜி எஸ்.ஏ.சீனிமுஹம்மது அவர்களையே சாறும். "இந்தியா எங்கள் தாய்நாடு" என்ற பாடலின் மூலம் உலக மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம் பிடித்து " அன்றைய "மருதநாயகம்" முதல் இன்றைய" ஜனநாயகம் தானா" வரை எத்தனையோ புரட்சிப்பாடல்களை ஆயிரக்கணக்கான பாடல்களை வீரமுழக்கமிட்டு அவர்களின் பாடல்கள் இசைத்தட்டின் வழியே நாட்டிலும் காட்டிலும் மேட்டிலும் , பட்டித்தொட்டிகளிலும் நாளெல்லாம் இசைத்துநிற்கக்காணலாம். மலேசியாவின் பல திருமணநிகழ்வுகளில் கச்சேரிகள் மூலம் தன்னுடைய பாடல்களை அரங்கேற்றியது...