ஏர்வாடி ஷரீஃப் வாழும் இஸ்லாத்தின் தீபம் ஸஹீத் சையித் இப்றாஹீம் பாதுஷா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வரலாறு -- இரண்டாம் பாகம்.
யார் வாடி நின்றாலும் ஏர்வாடி வாருங்கள்: அங்கு வந்து அங்கு அடங்கி இருக்கும் இறை நேசர்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் கேளுங்கள். இராமநாதபுரம் மாவட்டம் கீழ்க்கரையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஏர்வாடி தர்கா. இங்கு சுல்தான் சையிதுஇபுராகீம் ஷஹீது (வலி) என்ற பாதுஷா நாயகம் உள்பட பல மகான்கள் அடங்கப்பட்டிருக்கிறார்கள். மதினா நகரிலிருந்து இறைப்பணி ஆற்ற வந்த ஏர்வாடி பாதுஷாநாயகம் இறைவனடி சேர்ந்து ஏர்வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மகிமை: ஞானப்பாதையில் உதித்த பாதுஷாநாயகம் என்று போற்றப்படும். அல்குத்புல் அக்தாப் சுல்த்தான்ஸய்யிது இபுராகீம் ஷஹீது வலியுல்லா (ரலி) மதீனாவிலிருந்து இந்தியா வந்தார்கள். தங்களின் அன்பு உபதேசங்களினால் மக்களை நேர்வழியில் அழைத்தார்கள். இந்தியாவின் முதல் முஸ்லீம் மன்னர் என்ற பெருமையும் பெறுகிறார்கள். மக்பராக்கள்: ஏர்வாடி தர்காவில் அடங்கப்பட்டிருக்கும் பாதுஷா நாயகம் சமாதியின் (மக்பராவின்) இடப்புறமாக அவர்கள் மைந்தர் சையிது அபுத்தாகிர் (வலி) அடக்க ஸ்தலத்தை காணமுடியும், ஏர்வாடி வளாகத்துக்குள்ளேயே பாதுஷா நாயகமவர்களின்...