ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் கிப்லா அவர்கள் மறைவு!
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நாடறிந்த மார்க்க அறிஞரும், அற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மார்க்கப் பணிகளில் மிகப் பெரும் சேவையாற்றி வரும் தமிழ்நாடு மாநில ஜமாஅ(த்)துல உலமா சபை துணைத் தலைவரும், தஞ்சை மாவட்டம் ஆவூர் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலின் தலைமை இமாமுமாகிய மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் 'செங்கோட்டைச் சிங்கம்' மு. அப்துஷ் ஷக்கூர் ஃபாஜில் மன்பயீ ஹழ்ரத் அவர்கள், இன்று (செவ்வாய் 29.07.2014) மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு கோவையில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஹழ்ரத் அவர்களுக்கு வயது 65. அன்னாரின் ஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (புதன் 30.07.2014) லுஹர் தொழுகைக்குப் பிறகு தஞ்சை மாவட்டம் ஆவூரில் நடைபெறும். சிந்திக்க வைக்கும் சொற்பொழிவுக்கு சொந்தக்காரரான ஆலிம் பெருந்தகையான ஹஜ்ரத் அவர்களின் மரணச் செய்தி ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தையும் குலுக்கி எடுக்கும் துக்கச் செய்தியாகியுள்ளது. செங்கோட்டை சிங்கம் என்று உலக தமிழ் முஸ்லிம் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர்கள். அஹ்லுஸ் ஸுன்னத் வல்...