சமுதாய ஒளிவிளக்கு வள்ளல் அல்ஹாஜ் சீ.தஸ்தகீர் சாஹிப் அவர்கள் மறைவு !!!
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சித்தார் கோட்டை,சமுதாய ஒளிவிளக்கு வள்ளல் அல்ஹாஜ் சீ.தஸ்தகீர் சாஹிப் அவர்கள் 12-04-2016 அன்று மாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் 13-04-2016 புதன் கிழமை மாலை அஸர் தொழுகைக்குப்பிறகு பெரிய பள்ளிவாசல் கப்ருஸ்தானில் நடைபெற்றது. வள்ளல் அவர்களைப் பற்றி சில சென்ற மாதம் 18-03-2016 அன்று சித்தார் கோட்டையில் மீலாதுப் பெருவிழாவை வள்ளல் அவர்கள் நடத்தி வைத்தார்கள். மறைந்த வள்ளல் அவர்கள்,சித்தார் கோட்டையின் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் தூணாக வாழ்ந்தவர்கள். யா அல்லாஹ் இவர்களை போல நல்ல மனிதர்கள் பலரை, சித்தார் கோட்டைக்கு வாரி வழங்குவாயாக ஆமீன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹும் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின்...