சித்தாரிய்யா அரபுக் கல்லூரியில் மீலாதுப் பெருவிழா
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சித்தார் கோட்டை மாநகருக்கு புனிதம் சேர்க்கும் ''ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரியில்'' ''லஜ்னத்துல் லம்ஆன் மாணவர் மன்றம்'' சார்பில், மீலாதுப் பெருவிழா- (16-02-2011) -புதன் கிழமை மாலை மூன்று மணியளவில் இனிதே தொடங்கியது. கூட்டத்திற்கு கல்லூரி முதல்வர் மௌலானா அல்ஹாஜ் கீழக்கரை ஹுஸைன் அப்துல் கரீம் மன்பஈ ஹழரத் தலைமை தாங்க, மாணவர் ஜியாவுல் ஹக் திருமறை ஓத, முஹம்மது ரிஷாத், மற்றும் முகம்மதியா பள்ளிகளின் முன்னால் ஆசிரியர் E.M. ஹனீஃபா அவர்கள் கீதம் பாட விழா இனிதே துவங்கியது. மாணவர் மன்றத் தலைவர் ஹாஃபிழ் ஃபைஸ் அஹமது வரவேற்புரை நிகழ்த்தினார். ஆரம்பமாக கல்லூரியின் தாளாலர் மௌலவி அல்ஹாஜ் சுதானா முஹம்மது ஆலிம் அரூஸி,ஃபாஜில் ஜமாலி துவக்கவுரை ஆற்றினார்கள். கல்லூரிப் பேராசிரியர்கள், மௌலவி அல்ஹாஜ் செய்யிது அபுத்தாஹிர் ஆலிம் அரூஸி ஃபாஜில் ஜமாலி, ...