குர்பானியின் ஷரீஅத் சட்ட விளக்கங்கள்.Qurbani in the view of Shariah
தொகுப்பு: சையத் ஷாஹ் வஜீஹுன்னகீ சக்காப் ஷுத்தாரில் காதிரி அவர்கள் குர்ஆன் கூறுகிறது 'அதன் (குர்பானியின் மாமிசமோ, அல்லது அதன் இரத்தமோ அல்லாஹ்வை சென்றடைவதில்லை. எனினும் உங்களின் தக்வா(பயபக்தி)தான் அவனை சென்றடைகிறது'. –அல்-குர்ஆன் 22:37. அல்லாஹ் மேலும் கூறுகிறான். 'எனவே நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்கு பகரமாக்கினோம்' –அல்-குர்ஆன் 37:107 ஹஜ்ரத் இப்றாகிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ் அனுப்பி வைத்த செம்மறி ஆட்டை குர்பானி கொடுத்தார்கள் –தப்ஸீர் குர்துபி ஹிஜ்ரி 2-ம் வருடம் குர்பானி கடமையாக்கப்பட்டது. ஹனபி மத்ஹபின் படி குர்பானி கொடுத்தல் வாஜிபாகும். இமாம் ஷாபிஈ அவர்களிடத்தில் குர்பானி கொடுத்தல் சுன்னத்தே முஅக்கதாவாகும். குர்பானி யார் மீது கடமை? இமாம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 'தமது ஊரில் தங்கி இருக்கக் கூடிய வசதியான அடிமைகளாக இல்லாத சுதந்திரமான முஸ்லிம்களின் மீது குர்பானி கொடுத்தல் வாஜிபு' எனக் கூறுகின்றனர். குர்பானி கொடுக்கக் கூடிய நபரின் பொருளாதார வ...