தமிழக அரபுக் கல்லூரிகளின் இவ்வருடத்தின் பட்டமளிப்பு பெருவிழாக்கள்
இராமநாதபுர மாவட்டம் கீழக்கரை அல்-ஜாமியத்துல் அரூஸிய்யா தைக்கா அரபுக் கல்லூரியின் மௌலவி ஆலிம் பட்டமளிப்பு விழா ஜூலை 1 ஆம் தேதி மிகச்சிறப்பாக நடைபெற்றது.தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் கௌரவ தலைவரும்,அகில உலக ராத்திபத்துல் ஜலாலிய்யா,காதிரிய்யா தரீக்காவின் ஷைகுமான,டாக்டர் மௌலானா மௌலவி அல்லாமா தைக்கா ஷுஐபு ஆலிம் அவர்கள் தலைமை தாங்கி ஸனது வழங்கினார்கள்.சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவரும்,சென்னை கைருல் பரிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் அவர்கள் சிறபுப்பேருரையாற்றினார்கள். காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.கேரள மாநிலம் கோடம் பழா தாருல் மஆரிஃப் அரபுக் கல்லூரித் தலைவர்,மௌலானா உஸ்தாத் பி.எஸ்.கே.மொய்து பாக்கவி,காயல்பட்டினம் அல் ஜாமிஉல்-கபீர் பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும்,முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான,வரலாற்று விரிவுரையாளர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் எச்.எ.அஹ்மது அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.கேரள மாந...