ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற புனிதம் வாய்ந்த ஸலவாத்து மஜ்லிஸ்
முபஸ்மிலன்! முஹம்திலன்!! முஸல்லியன்!!! வமுஸல்லிமா!!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சிகாம்புட்,மதரஸா மன்பவுல் உலூமில் 1மில்லியன் முறை ஸலவாத்து ஓதும் மஜ்லிஸில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள் ''யார் என் மீது அதிகமாக ஸலவாத்து சொல்கிறார்களோ நாளை மறுமையில் என்னோடு மிக நெருக்கமாக இருப்பார்கள்''இப்படிப்பட்ட பாக்கியம் நிறைந்த வாய்ப்பினை அனைவருக்கும் ஏற்படுத்தித்தரும் வகையில் 10 லட்சம் முறை ஸலவாத்து ஓதும் மஜ்லிஸ் நிகழ்ச்சி, கடந்த 23-06-2012 சனிக்கிழமை மாலை 4 முதல் இரவு 10 மணி வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது.ஒரு மில்லியன் முறை ஸலவாத்து ஓதும் மஜ்லிஸ் நடைபெறுவது, மலேசியாவிலேயே இதுவே முதன் முறையாகும்.நிகழ்ச்சிக்கு கேரள மாநிலத்திலிருந்து இமாம் பாபுஜி தங்கள் அவர்கள் சிறப்பு பிரமுகராக வருகை தந்து மஜ்லிஸை வழிநடத்தினார்கள்.ஜொகூர் மலபார் சங்க ஏற்பாட்டில் பேருந்துகளில் மக்கள் வருகைதந்தனர்.மேலும் சிங்கப்பூர்,பினாங்கு,பேரா,மலாக்கா,கெடா,சிலாங்கூர் போன்ற மாநிலங்களிலும் இருந்தும் பலர் தனித்தனியாகவும்,கலந்துகொண்டு அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுக்கொண்டார்கள்.வஸ்ஸலாம்..
வெளியீடு- மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.
Comments
Post a Comment