தமிழக அரபுக் கல்லூரிகளின் இவ்வருடத்தின் பட்டமளிப்பு பெருவிழாக்கள்
இராமநாதபுர மாவட்டம் கீழக்கரை அல்-ஜாமியத்துல் அரூஸிய்யா தைக்கா அரபுக் கல்லூரியின் மௌலவி ஆலிம் பட்டமளிப்பு விழா ஜூலை 1 ஆம் தேதி மிகச்சிறப்பாக நடைபெற்றது.தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் கௌரவ தலைவரும்,அகில உலக ராத்திபத்துல் ஜலாலிய்யா,காதிரிய்யா தரீக்காவின் ஷைகுமான,டாக்டர் மௌலானா மௌலவி அல்லாமா தைக்கா ஷுஐபு ஆலிம் அவர்கள் தலைமை தாங்கி ஸனது வழங்கினார்கள்.சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவரும்,சென்னை கைருல் பரிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் அவர்கள் சிறபுப்பேருரையாற்றினார்கள்.
காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.கேரள மாநிலம் கோடம் பழா தாருல் மஆரிஃப் அரபுக் கல்லூரித் தலைவர்,மௌலானா உஸ்தாத் பி.எஸ்.கே.மொய்து பாக்கவி,காயல்பட்டினம் அல் ஜாமிஉல்-கபீர் பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும்,முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான,வரலாற்று விரிவுரையாளர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் எச்.எ.அஹ்மது அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.கேரள மாநிலம் மஹ்ழரி அசோசியேசனைச்சார்ந்த உலமாப்பெருமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைத்தலைவரும்,மஹ்ழராவின் முதல்வருமான,மௌலானா மௌலவி அல்லாமா எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ஆலிம் ரஹ்மானி ஹஜ்ரத் அவர்கள் ஸனது வழங்கி,பட்டமளிப்பு பேருரை வழங்கினார்கள்.பார்வையற்ற பி.ஒய்.எஸ்.ஹாரிஸ் ஹல்லாஜ் அவர்கள் ஹாஃபிழ் பட்டம் பெற்றார்கள்.
முகவை மாவட்டம்-வீரசோழன் ஹைராத்துல் இஸ்லாம் அரபுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.ஆன்மீகப் பேரொளி இனாம் குளத்தூர் மௌலானா மௌலவி அல்லாமா ஷாஹுல் ஹமீது ஜமாலி ஹஜ்ரத்,நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரி முதல்வர் மௌலானா மௌலவி இஸ்மாயீல் ஹஜ்ரத் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்.
முகவை மாவட்டம் -சாத்தான்குளம் பெண்கள் அரபுக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக்கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி எஸ்.எஸ்.ஹைதர் அலி மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
முகவை மாவட்டம்-அழகன்குளம் ஹிஃப்ழு மதரஸாவின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.பெங்களூர் ஷபீலுர் ரஸாத் அரபுக் கல்லூரியின் பேராசிரியர் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் ஸைஃபுத்தீன் ரஷாதி ஹஜ்ரத் அவர்கள் ஸனது வழங்கி பட்டமளிப்பு பேருரையாற்றினார்கள்.
கீழக்கரை செய்யது ஹமீதா அரபுக் கல்லூரி 25-ஆம் ஆண்டு விழா--பட்டமளிப்பு விழா நடைபெற்றது. வேலூர் அல்-பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரிப் பேராசிரியர் மௌலானா மௌலவி அப்துல் ஹமீது பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் ஸனது வழங்கி,பட்டமளிப்பு பேருரையாற்றினார்கள்.
சென்னை -நெமிலி பிலாலியா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஜுலை 1 ஆம் தேதி நடைபெற்றது.கல்லூரியின் நிறுவனர் மௌலானா ஆஷிகுர் ரஸூல்,பிலாலிஷாஹ் ஜுஹூரி ஹஜ்ரத் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.ஹைதராபாத் ஜாமிஆ ஆரிஃபிய்யா அரபுக் கல்லூரியின் ஸ்தாபகர்,ஸஜ்ஜாதா நஷீன்,மௌலானா சைய்யிது ஆரிஃபுத்தீன் ஜீலானி நூருல்லாஹ் ஷாஹ் அவர்கள் 48 மாணவர்களுக்கு ஸனது வழங்கினார்கள்.
கடையநல்லூர் ஃபைஜுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 33 வது ஆண்டு பட்டமளிப்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் துணைத்தலைவர் செங்கோட்டைச் சிங்கம் மௌலானா மௌலவி ஆவூர் எம்.அப்துஸ் ஷுக்கூர் ஃபாஜில் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி ஹாஜா முயீனுத்தீன் அஸ்லமி ஹஜ்ரத் அவர்கள்,24 மாணவர்களுக்கு ஸனது வழங்கினார்கள்.
ஈரோடு தாவூதிய்யா அரபுக் கல்லூரியின் 48-வது பட்டமளிப்பு விழா ஜூலை 3-ஆம் தேதி மிகச்சிறப்பாக நடைபெற்றது.கர்நாடகா அமீரே ஷரீஅத் மௌலானா மௌலவி அல்லாமா அஷ்ரப் அலி பாக்கவி ஹஜ்ரத் அவர்கள் ஸனது வழங்கி பட்டமளிப்புப் பேருரையாற்றினார்கள். நீடூர்-மிஸ்பாஹுல் ஹுதாவின் முதல்வர் மௌலானா மௌலவி முஹம்மது இஸ்மாயீல் ஹஜ்ரத் அவர்கள் சிறப்புப்பேருரையாற்றினார்கள்.
கோவை கோட்டை ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாஅத்தின் மன்பவுல் உலூம் அரபுக் கல்லூரியின் 21 வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.கல்லூரி முதல்வர் மௌலானா முஹம்மது அலி இம்தாதி ஹஜ்ரத்,இம்தாதுல் உலூம் அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா அமானுல்லாஹ் நூரிய்யி ஹஜ்ரத் ஆகியோர் ஸனதுகள் வழங்கினார்கள்.
கரூர் மாவட்டம் தோகை மலை ஜாமிஆ ஜவாஹிருல் உலூம் அரபுக் கல்லூரி பட்டமளிப்பு விழா ஜூலை 2 ஆம் தேதி நடைபெற்றது.நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைத்தலைவர்,மௌலானா மௌலவி அல்லாமா டி.ஜே.எம்.ஸலாஹுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் தலைமையேற்று ஸனது வழங்கினார்கள்.
தென்காசி ஜாமிஆ அல்தாஃபுர் ரப்பானிய்யா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.தாய்ச் சபைத்தலைவர்,பேராசிரியர் கே.எம் காதர் முஹைதீன் அவர்கள்,தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை துணைத்தலைவர் செங்கோட்டைச் சிங்கம் மௌலானா மௌலவி ஆவூர்,எம் அப்துஸ் ஷுக்கூர் ஃபாஜில் மன்பஈ ஹஜ்ரத் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்.கல்லூரி முதல்வர் மௌலானா எம்.எச்.ஷம்சுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் ஸனது வழங்கினார்கள்.
நெல்லை-பேட்டை ரஹ்மானியா பள்ளிவாசல் மதரஸா பைளுர் ரஹ்மான் 30 வது பட்டமளிப்பு விழா ஜூலை 9 ஆம் தேதி,தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர்,ஷைகுல் ஹதீஸ் எ.இ.முஹம்மது அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நெல்லை-பேட்டை பத்ஹுல்லாஹ் ஹழரத் நினைவு ரஹ்மானியா பெண்கள் மதரஸா பட்டமளிப்பு விழா ஜூலை 8 ஆம் தேதி நடைபெற்றது.தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர்,ஷைகுல் ஹதீஸ் எ.இ.முஹம்மது அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் அவர்கள் பட்டம் வழங்கி,பட்டமளிப்பு பேருரை வழங்கினார்கள்.
நாகை மாவட்டம் தோப்புத்துறை அன்னை ஃபாத்திமா (ரலி) பெண்கள் அரபுக்கல்லூரி 5 ஆம் ஆண்டு ஆலிமா பட்டமளிப்பு விழா நடைபெற்றது.வேலூர் அல்-பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் பேராசிரியர் மௌலானா மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி எஸ்.எஸ்.ஹைதர் அலி மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் ஸனது வழங்கி, சிறப்புரையாற்றினார்கள்.
நெல்லை மாவட்டம்-அச்சன்புதூர் ஷம்ஸிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் மௌலானா மௌலவி அல்லாமா டி.ஜே.எம்.ஸலாஹுத்தீன் ஹஜ்ரத் அவர்கள்,நெல்லை மாவட்ட அரசு டவுன் காஜி ஏ.ஓய்.முஹ்யித்தீன் ஹஜ்ரத் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்.தென்காசி ரப்பானிய்யா அரபுக்கல்லூரி முதல்வர் மௌலானா எம்.எச்.ஷம்சுத்தீன் ஹஜ்ரத் அவர்கள் ஸனது வழங்கினார்கள்.
நெல்லை மாவட்டம்-வீராணம் ஜைனபிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் 4 ஆம் ஆண்டு ஆலிமா பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
நெல்லை மாவட்ட அரசு டவுன் காஜி ஏ.ஓய்.முஹ்யித்தீன் ஹஜ்ரத் அவர்கள்,தென்காசி ரப்பானிய்யா அரபுக்கல்லூரி முதல்வர் மௌலானா எம்.எச்.ஷம்சுத்தீன் ஹஜ்ரத் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்.கல்லூரி முதல்வர் மௌலானா வி.எம்.என்.முஹம்மது லியாகத் அலி ஹஜ்ரத் அவர்கள் ஸனது வழங்கினார்கள்.
சங்கரன்கோவில் -மத்ரஸதுர் ரஹ்மானியா ஹிஃப்ழு மதரஸா பட்டமளிப்பு விழா நடைபெற்றது.மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி எஸ்.எஸ்.ஹைதர் அலி மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் ஸனது வழங்கி, சிறப்புரையாற்றினார்கள்.
நெல்லை -வாசுதேவநல்லூர் ரஹ்மானியா அரபி மதரஸா ஆண்டு விழா நடைபெற்றது.மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக் கல்லூரியின் முதல்வர் மௌலானா மௌலவி எஸ்.எஸ்.ஹைதர் அலி மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
கடையநல்லூர்- ரியாலுஸ் ஸாலிஹாத் மகளிர் அரபுக் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது.சென்னை மந்தைவெளி ஈத்கா மஸ்ஜித் தலைமை இமாம் மௌலானா இல்யாஸ் ரியாஜி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
மனப்பாறை -அருகே உள்ள புத்தா நத்தம் ஆயிஷா மகளிர் அரபுக் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது.நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா அரபுக்கல்லூரி முதல்வர் மௌலானா மௌலவி இஸ்மாயீல் ஹஜ்ரத் அவர்கள் ஸனது வழங்கி,பட்டமளிப்பு பேருரையாற்றினார்கள்.
வெளியீடு-மன்பஈ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.
Comments
Post a Comment