முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) வாழ்வும் வாக்கும் !!!
ஷைக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) இஸ்லாம் கண்ட மிகப்பெரிய சீர்திருத்த வாதி. முஸ்லிம் சமுதாயம் அறிவு வழி பயணித்தாலும் ஆன்மீக வழியில் சென்றாலும் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டிலிருந்து வழி தவறிவிடக்கூடாது என்பதை அழுத்தமாக போதித்தவர். இறைச்சிந்தனையே வாழ்வாக கொண்டுநடப்பதில் முன்னோடி உலக் ஆசாபாசங்களையே வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து விடாமல் இறைச்சிந்தனையோடு மக்கள் வாழ்வதற்காக காதிரிய்யா தரீக்காவின் முறையை கொடுத்தவர். பலவேறு ஷைகுகளின் வழிகாட்டுதல் படி உருவான் பக்தி மார்க்கமான தரீக்காக்களை (ஷாதுலிய்யா நக்ஷபந்திய்யா சிஸ்திய்யா) ஒருங்கிணைத்தவர். ஆன்மீகம் என்பதற்கு சரியான இலக்கணம் கொடுத்தவர். கேட்போரை அப்போதே ஈர்த்துவிடும் அற்புதமான ஈர்ப்பு சக்திமிக்க சொற்பொழிகளால் எராளமான குற்றவாளிகளை திருத்தினார்.. 50 ஆயிரம் பேர் இஸ்லாத்தை தழுவ காரணமானவர்.. ஏராளமான அற்புதங்களுக்கு சொந்தக்காரர் كان كثير الكرامة அவர் மீது நிறைய மரியாதை வைத்திருக்கிறோம். வழக்கம் போல அவரைப் பற்றி நமக்கு தெர...