Posts

Showing posts from 2011

"MOULAVI AL-HAJ HAMID BAKRI 1/7"

Image

தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்

Image
குர்பானி கொடுப்பதால் இறைக் கடமை நிறை வேறுகிறது . மன நிம்மதி நிறைகிறது . உறவுகள் ஒன்று கூடுகிறது . ஏழைகள் பசியாறுகிறார்கள் . பள்ளி , மத்ரஸாக்கள் பயனடைகிறது . இறையருல் இறங்குகிறது . தியாக உணர்வு உயர்கிறது . ஜீவ காரூண்யம் நிலைநாட்டப்படுகிறது . கூட்டுறவு மேம்படுகிறது . வறியவர்கள் வளம் பெறுகிறார்கள் . அனாதைகள் பலம் பெறுகிறார்கள் . முதிர் கன்னிகள் கல்யாணமாலை சூடுகிறார்கள். ஆகவே அத்தகைய உயர் தியாகத்தை நாம் அனைவரும் நிறை வேற்றி அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும்,பெற்றுக் கொள்ளுமாறும்,மேலும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்களை கூறி சித்தார்கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர், மற்றும் சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை வாழூர் கிளையினரும்,வாழ்த்துக் கூறி அகமகிழ்ந்து துஆச் செய்கிறார்கள். வஸ்ஸலாம்..... www.chittarkottaisunnathjamath.blogspot.com , ,

தலைநகரில் உதயமாகிறது புதிய அரபுக் கல்லூரி

Image
மலேசியா வாழ் இந்திய முஸ்லிம்களின் நீண்ட நாள் கனவான மார்க்கக் கல்விக்கான அரபுக் கல்லூரி மிக விரைவில் மலேசியத் தலைநக ர் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசலில் தொடங்கப்பட உள்ளது . பல நூறு ஆண்டுகளாக மலாயா தீபகற்பகத்தில் வாழ்ந்து வரும் இந்திய முஸ்லிம்கள் தாங்கள் வசித்து வரும் பகுதி க ளில் சிறு சிறு மதரஸாக்களை நிறுவி தமிழகத்திலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து தங்கள் குழந்தைகளுக்கு மார்க்க கல்வியின் அடிப்படைக் கல்வியை பயிற்றுவித்து வருகின்றனர் . மேலும் மார்க்க கல்வியை முழுமையாக படித்து  ஆலிம் , ஹாபிழ் படிப்புகளை கற்ப்பதற்கு தங்கள் பிள்ளைகளை தமிழகத்திற்கு அனுப்பிவைக்கும் நிலையே தொடர்கிறது . மலேசிய இந்திய முஸ்லிம்கள் மலேசியாவிலேயே முழுமையாக அரபுக் கல்லூரியில் பயிலும் நீண்ட நாள் கனவான அரபுக் கல்லூரி திட்டம் தலைநகர் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசல் வளாகத்தில் அல் ஹகீமிய்யா அரபுக் கல்லூரி என்ற பெயரில் புதிய கல்லூரி விரைவில் உதயமாக உள்ளது . இக்கல்லூரியில் ஸில்ஸிலே நிஜாமிய்யா பாடத்திட் ட ப்படி முழுமையான பாடங்கள் நடைபெறும் . முழுநேர அரபுக

சித்தாரிய்யா அரபுக்கல்லூரியில் மாபெரும் முப்பெருவிழா

பிஸ்மிஹி தஆலா சித்தார் கோட்டை சித்தாரிய்யா அரபுக்கல்லூரி 9- ஆம் ஆண்டு நிறைவு விழா நான்காவது '' மௌலவி '' ஆலிம் பட்டமளிப்பு விழா மஸ்ஜித் தையிபா புதிய பள்ளிவாசல் திறப்பு விழா ஹிஜ்ரி 1432 ஷவ்வால் பிறை (24 23-09-2011) வெள்ளிக்கிழமை , நேரம் மாலை 3-00 மணியளவில் இடம் மஸ்ஜித் தையிபா புதிய கட்டிட அரங்கம் சித்தாரிய்யா அரபுக்கல்லூரி புதிய வளாகம் சித்தார் கோட்டை . மஸ்ஜித் தையிபா புதிய பள்ளிவாசல் திறப்பு விழா தலைமை ; சித்தார் கோட்டை ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் M. ஷாஹுல் ஹமீது கனி .Bsc அவர்கள்   முன்னிலை வகிப்பவர்கள் ; வள்ளல் அல்ஹாஜ் S. தஸ்தகீர் அவர்கள் . அல்ஹாஜ் S.M. கமருல் ஜமான் A.E.A.A.(Lon) அவர்கள் ஜனாப் S. ஆரிஃப்கான் அவர்கள் . அல்ஹாஜ் வள்ளல் முஹம்மது யூசுப் அவர்கள் . வாழூர் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் E. காதர் அவர்கள் . இராமநாதபுர   மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜனாப் A.R. துல்கீப் அவர்கள் . புதிய பள்ளிவாசல் திறப்பாளர் ;- மலேசிய தொழிலதிபர் அல்ஹாஜ் டத்தோ A. அப்துல் அஜீஸ் அவர்கள் . RESTORAN SUBAIDHA SDN BHD MALAYSIYA சிறப்புத

சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின் நான்காவது ‘’மௌலவி’’ ஆலிம் பட்டமளிப்பு விழா

பிஸ்மிஹி தஆலா               நாள் -(23-09-2011) வெள்ளிக்கிழமை நேரம் மாலை 5-00 மணியளவில் தலைமை ; சித்தார் கோட்டை முஹம்மதியா பள்ளிகளின் தாளாலர் பேராசிரியர் அல்ஹாஜ் P.A.S. அப்பாஸ் Bsc. அவர்கள் . நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் முஹம்மதியா பள்ளிகளின் செயலாளர் ஜனாப் A. முஹம்மது இஸ்மாயீல் ஆசிரியர் அவர்கள் . வரவேற்புரை சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின் நிறுவனர் , மௌலானா மௌலவி அல்ஹாஜ்   செய்யிது முஹம்மது புஹாரி ஆலிம் ஃபாஜில் மன்பயீ அவர்கள் துவக்க உரை சித்தாரிய்யா அரபுக்கல்லூரியின் முதல்வர் , கீழக்கரை , மௌலானா மௌலவி அல்ஹாஜ் ஹுஸைன் அப்துல் கரீம் ஆலிம் மன்பயீ ஹஜ்ரத் அவர்கள் . முன்னிலை வகிப்பவர்கள் . அல்ஹாஜ் P.A.S. வருசை உமர்கான் அவர்கள் . ஜனாப் S.T. ஷாஜஹான் அவர்கள் ( புருனை ) சித்தார்கோட்டை சுன்னத் வல் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் H. அஹ்மது இப்றாஹீம் ( வட்டம் ) அவர்கள் . ஸனது வழங்குதல் பினாங்கு மஸ்ஜித் கபிதார் , தலைமை இமாம் , FATWA PANEL OF PENANG ISLAMIC DEPARTMENT, தொக்கோ , மஅல்ஹிஜ்ரா டத்தோ அப்துல்லாஹ் புஹாரி ஆலிம் மிஸ்

நினைவுநாள் அழைப்பிதழ்

Image
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் பனைக்குளம் மெய்ஞான மாமேதை, மெய்நிலை கண்ட தவஞானி, அறிவுலகப் பேரொளி, அல்ஹாஜ், அல்லாமா, மலிகுல் உலமா, அஷ்ஷெய்குல் காமில், குத்துபுஜ் ஜமான், மஸீஹுல் அனாம்,  ஆரிஃபு பில்லாஹ், ஷெய்குனா, செய்யிதீ, மாமஹான் பாபா, செய்யிது முஹம்மது ஆலிம் வலியுல்லாஹ் (ரலி) ஹஜ்ரத் கிப்லா அவர்களின் 45-ஆம் ஆண்டு நினைவு நாள் விழா.  (22-09-2011)  வியாழன் பின்னேரம்  மிகச்சிறப்பாக நடைபெற இருக்கிறது. அது சமயம்  சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவைத் தலைவர்  மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் M.ஷைகு அப்துல்லாஹ் M.A. ஆலிம் ஜமாலி ஹஜ்ரத் அவர்கள்  மாலை 4-00 மணியளவில் சிறப்புப் பேருரை நிகழ்த்த  இருக்கிறார்கள். அதன் பின்னர் மஃரிப் தொழுகைக்குப் பிறகு கண்ணியம் நிறைந்த உலமாப் பெருமக்களும், பல அறிஞர் பெருமக்களும், சிறப்பான இந்த மஜ்லிஸில் கலந்து கொண்டு, பாவா செய்யிது முஹம்மது வலியுல்லாஹ் அவர்களின் பெயரில் குர்ஆன் கானி செய்து துஆச் செய்ய இருக்கின்றார்கள். அனைவரும் இச்சிறப்பான மஜ்லிஸிற்கு வருகை தந்து,  சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸில் கலந்து கொண்டு, நல்லாச

ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரி

Image
ஸ்தாபிதம் ; 2001   சித்தார் கோட்டை -623513    இராமநாதபுரம் (Dt)     ph; 04567-261799 E-Mail ; chittariyya@gmail.com                அன்புடையீர் !                       அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) அல்லாஹ்வின் பேரருளால் இக்கல்லூரியில் ஒவ்வொரு ஜூன் மாதம் முதல் கீழ் கண்ட மூன்று முறைகளில் மார்க்க கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இக்கல்லூரியில் அரபி , ஆங்கிலம் , உருது ஆகிய மும்மொழி நவீன பாடத்திட்ட அமைப்பில் அஃப்ழலுல் உலமா படிப்புடன் கம்யூட்டர் கலையுடன் கூடிய ஐந்தாண்டு கால '' மௌலவி ஆலிம் '' ( இஸ்லாமிய்ய மார்க்க ) பட்டப்படிப்பு பயில்வது . கல்லூரி ஹாஸ்டலில் தங்கிக் கொண்டு சித்தார் கோட்டை முஹம்மதியா மேல் நிலைப் பள்ளியில் + 2 வரை பயில்வது , ஐவேளை தொழுகை , நல்லொழுக்கப் பயிற்ச்சி , கம்யூட்டர் கலை , அரபி , ஆங்கிலம் , உருது ஆகிய மொழிகளில் சரளமாக பேச , எழுத அரசு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற திறமை மிக்க ஆசிரியர்களைக்கொண்டு பயிற்ச்சியளித்தல் .  தஜ்வீது கலையுடன் கூடிய மூன்று ஆண்டு கால ஹிஃப்ழுல் குர்ஆன் 

அரபுக்கல்லூரிகள் துவங்கியது!!!

Image
பிஸ்மிஹி தஆலா எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் அரபுக்கல்லூரிகள் விடுமுறைக்குப் பிறகு ஆறம்பம் ஆகிவிட்டது. மார்க்கக்  கல்வியை தேடிப் பெறுவது முஸ்லிமான ஆண்கள், பெண்களின் மீது கட்டாய கடமை என பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆனால் முஸ்லிமான நம்மவர்கள் சமீப காலமாக தங்களது குழந்தைகளுக்கு மார்க்க கல்வியை வழங்காமல் அதாவது காலை மதரஸாக்களுக்குகூட (மக்தப்) அனுப்பாமல் உலகக் கல்வியை மட்டும் வழங்குவதில் அதிக கவனம் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். மார்கக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தினால் இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் குழப்பங்கள் அனாச்சாரங்கள், தீமைகள்,  அதிகமான பிரச்சினைகள்  காணப்படுகிறது. சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னால் வரை  மார்கக் கல்வியுடன் உலகக் கல்வியையும்  நமது இஸ்லாமிய பெற்றோர்கள்  தனது பிள்ளைகளுக்கு வழங்கினார்கள். இதன் காரணமாக தங்களது பிள்ளைகளை கண்ணிய மிகு ஆலிம்களாகவும், கண்ணியமிகு  ஹாஃபிழ்களாகவும், பட்டதாரிகளாகவும்,  உருவாக்கினார்கள். இஸ்லாமிய சமுதாயம் ஒற்றுமையாகவும், அமைதியாகவும்.தீமைகளை விட்டும் விலகி வாழ்ந்தார்கள்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு