இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய அலுவலகத் திறப்பு விழா !!!
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின், புதிய அலுவலகத் திறப்பு விழா ரபீவுல் அவ்வல் பிறை 09 ( 01-01-2015 ) வியாழக் கிழமை அன்று அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் திறப்பு விழா கண்டது. அல்ஹம்துலில்லாஹ். இவ்விழாவிற்கு கீழக்கரை ஜாமிஆ அரூஸிய்யா அரபுக் கல்லூரியின் அரங்காவலர்,மற்றும் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் கௌரவத் தலைவருமான,அல்லாமா அப்தலுல் உலமா அஷ்ஷெய்கு டாக்டர் தைக்கா ஷுஐபு ஆலிம் B.A(Hons),M.A..,Ph.D. அவர்கள் தலைமை தாங்கி,அலுவலகத்தை திறந்து வைத்தார்கள். இராமநாதபுரம் மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாஅத்துகளின் தலைவர்கள்.நிர்வாகிகள் மற்றும் ஏழு வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர்கள், செயலாளர்கள் & பொருளாலர்கள் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள். இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மௌ...