அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புத்ராஜெயா சர்வதேச கன்வென்ஷன் செண்டரில் 25.04.2014 வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக தலைமைப் பண்பிற்கான விருது 2014 வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கோலாலம்பூர் ( மலேசியா ) : சென்னை பி.எஸ். அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழக வேந்தரும், புஹாரியா ஹோல்டிங்ஸ் தலைவரும், துபை ஈடிஏ அஸ்கான் குழும எக்ஸ்கியூடிவ் உதவி தலைவர் மற்றும் சீதக்காதி அறக்கட்டளை தலைவருமாகிய அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு, மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புத்ராஜெயா சர்வதேச கன்வென்ஷன் செண்டரில் 25.04.2014 வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக தலைமைப் பண்பிற்கான விருது 2014 வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவ்விருது தி லீடர்ஸ் சர்வதேச வர்த்தக இதழ், அமெரிக்கன் லீடர்சிப் டெவலப்மெண்ட் அமைப்புடன் இணைந்து ஆண்டு தோறும் உலகெங்கிலும் வர்த்தகம், ஊடகம், அரசுத்துறை, சமூகசேவை, சுற்றுலா, தொலைத்தொடர்பு, கட்டுமானத்துறை, போக்குவரத்து உள்ளிட்ட 25 துறைகளில் சிறந்து விளங்கும் தொழிலதிபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது உலகெங்கிலும் தலைசிறநத நடுவர்களைக் கொண்டு தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மானுக்கு வழங்கப்பட்ட விருதினை அவரது மகனும், புஹாரியா ஹோல்டிங்ஸ் இயக்குநருமான அஹமது புஹாரி ரஹ்மான் அவர்கள் பெ...