சையிதுனா இமாம் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் !!!

சையிதுனா இமாம் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் ஒரு நாள் மதீனாப் பள்ளியில் நுழைந்து தங்கள் பாட்டனார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுத இடத்தில் தொழுது விட்டுத் திரும்பினார்கள்...! அங்கே ஒரு மூலையில் உறங்கிக் கொண்டிருந்த வெளியூர்க்காரர் ஒருவர் இவர்களிடம் வந்து, என் பணப்பையைக் கொடும்! என்று கேட்டார்! பணப்பையா? எனக்கு ஒன்றும் தெரியாதே! நான் பார்க்கவில்லையே! என்ன விசயம் என தெளிவாகக் கூறுங்கள் என்று கேட்டார்கள்....!! அவரோ என்ன பாசாங்கு பண்ணுகிறீர்? நான் எவ்வளவு சிரமப்பட்டு அந்த ஆயிரம் பொற்காசுகளை சேகரித்து வந்தேன்! அவற்றை ஒரு நொடியில் கபளீகரம் செய்து விட்டீரே!உம்மைத்தவிர வேறுயாரும் இங்கு இல்லை. நீர்தான் அதனை எடுத்திருக்க வேண்டும் என்று அதட்டினார்.,,,, இமாம் அவர்கள் அவரின் பரிதாப நிலைகண்டு மனமிறங்கி தங்கள் வீட்டிற்கு அழைத்துச்சென்று ஒருபையைக் கொடுத்து இதனை எண்ணிப்பாருங்கள்! எடுத்துச் செல்லுங்கள்! என்றார்கள்...!! வெளியூர்க்காரர் எண்ணிப்பார்த்தார். அதில் இரண்டாயிரம் பொற்காசுகள் இருந்தன...! அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. என்ன இது? என வியப்புடன் வினவினார். பரவாயில்லை ...