ஏர்வாடி தர்ஹா மணலின் சிறப்பு !!!
ஏர்வாடி தர்ஹா மணலில் மன நிம்மதியும், நோய் நிவாரணமும் கிடைப்பது ஏன்??. மதினாவின் அரசராக இருந்த பாதுஷா சுல்தான்_ஸைய்யிது இப்ராஹீம் ஷஹீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் கனவு உத்தரவுப்படி இந்தியா வந்து, போர் செய்து, இஸ்லாமிய அரசை நிறுவி விட்ட பின் மீண்டும் மதீனா திரும்பி அங்கேயே வஃபாத் ஆக விரும்பிய போது, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மீண்டும் கனவில் தோன்றி "மகனே இப்ராஹீமே..! மதீனத்து மண்ணில் அடக்கமாக வேண்டும் என்ற உனது அவா புரிகிறது. ஆனால் உன்னை நான் இந்திய தேசம் அனுப்பியது இஸ்லாமிய அரசாட்சியை நிறுவ மட்டும் அல்ல. தெற்காசியாவில் எனது பிரதிநிதியாக கியாமத் நாள் வரை இருந்து அம்மக்களுக்கு என் புறத்திலிருந்து ரஹ்மத்தை அருள வேண்டும். மதீனாவின் மண்ணில் அடங்கப் பெற வேண்டும் என்கிற உனது அவாவை பூர்த்தி செய்ய, மதீனாவில் இருந்து ஒரு பிடி மணலை எடுத்து, நீ அடங்க இருக்கும் ஏர்வாடியில் ஊதி கலந்து விடு. மதீனத்து மணலில் என்ன பாக்கியம் இருக்கிறதோ அதை அப்படியே ஏர்வாடியின் பூமியில் அடைந்து கொள்வாய். கவலை வேண்டாம் மகனே" என கூறிச்...