இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வாழ்வுரிமை மாநாடு !!!
எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே 03-02-2018 அன்று இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வாழ்வுரிமை மாநாடு எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஹாஜி A. வருசை முஹம்மது தலைமை ஏற்று நடத்த மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் ஆலிம் பெருமக்கள், சமுதாய புரவலர்கள் முன்னிலை வகிக்க மாவட்ட உலமாக்கள் அணி அமைப்பாளர் மவ்லவி யூனுஸ் ஆலிம் அருள்மறை ஓத மாவட்ட செயலாளர் M.S.A.L. முஹம்மது பைசல் வரவேற்புரை ஆற்ற இளைஞர் அணி, மாணவர் அணியினரின் வீரியமிக்க உரைகள்; கூட்டத்தை சுறுசுறுப்பாக்கியது. மஃரிப் தொழுகை இடைவெளிக்குப் பின் அடுத்த அமர்வு ஆரம்பமானது. மாவட்ட தலைவர் ஹாஜி வருசை முஹம்மது அவர்களின் துவக்க உரையும் மாவட்ட காஜி ஸலாஹ{த்தீன் ஆலிம், கீழக்கரை டவுன் காஜி காதர் பக்ஸ் ஹ{சைன் , சீனா தானா காக்கா ஆகியோரின் பேச்சுக்கள் சிந்திக்க வைத்தன. இராமநாதபுரம் மாவட்டத்தில் முஸ்லிம் லீக் கடந்து வந்த பாதைகள் , சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல் களத்தில் பெற்ற வாக்குகளின் புள்ளி விபரங்கள் , ஆதம் நபி முதல் மறைந்து வாழும் இறைநேசர்களின் தியாகங...