சரிந்தது சகாப்தம் !!! வேங்கையின் வேகம் அடங்கியது !!! ஆலமரத்து அடிவேர் சாய்ந்தது !!!
தமிழகத்து உலமாக்களுக்கு இவர் கல்விக் கருவூலம் அஹ்லுஸ் ஸுன்னாவின் சிம்ம சொப்பனம் பாக்கியாத் எனும் பெரும் சமுத்திரத்தின் பெயர் போன ஆக்ரோஷ அலை எவருக்கும் அடங்கா துணிவு கொண்ட உள்ளம் பாக்கியாத்தில் துவங்கிய கல்வி பயணம் அங்கேயே பேராசிரியராக பணியாற்றி பல்லாண்டு காலம் பல்கலை கழகமாக மாணவர்களுக்கு காட்சியளித்த மாமேதை அத்திக்கடை வாஹித் பாத்திமா அரபிக்கல்லூரி முதல்வராக நீண்ட காலம் பணிபுரிந்து மறையும் வேளையில் உஸ்தாதாகவே மறைந்தவர் தமிழ் கூறும் முஸ்லிம் உலகின் தலைசிறந்த பேச்சாளர்களில் பெரும்பாலோர் இவர் முன் மண்டியிட்டு கல்வி தாகம் தீர்த்தவர்கள் லுகத் எனும் மொழித் திறனிலும் மன்திக் மஆனி எனும் ஆற்றல் சேர் பேச்சுக் கலையிலும் முனாஜரா எனும் வாதம் புரியும் துறையிலும் தனக்கென தனியிடம் வகிப்பவர் இவருக்கு நிகர் இவரே PJ வை துவக்கக் காலத்திலேயே திணறடித்த இவரின் விவாத வார்த்தைகள் இன்று செவியேற்றாலும் ச...