மலேசியத் திருநாட்டில் 53- வது திலாவத்துல் குர்ஆன் போட்டி
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் , வளம் கொழிக்கும் மலேசியத் திருநாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள P.W.T.C அரங்கத்தில் அனைத்துலக 53- வது திருக்குர்ஆன் ஓதும் போட்டி (16-07-2011) முதல் (23-07-2011) வரை ஆறு தினங்கள் மிக விமர்ச்சயாக நடந்து முடிந்தது . இதில் நாற்ப்பது நாடுகள் பங்குபெற்றன . உலகத்திலேயே தொடர்ந்து 53 வருடங்கள் திருக் குர்ஆன் ஓதும் போட்டி மலேசியாவில் தான் நடந்து வருகிறது அல்ஹம்துலில்லாஹ் . இதில் ஆண்களும் , பெண்களும் கலந்து கொண்டு வருகிறார்கள் . ஆண்களில் , மலேசியாவைச் சேர்ந்த காரீ , முதலிடத்தையும் , பிலிப்பைன்ஸை சேர்ந்த காரீ இரண்டாவது இடத்தையும் , மிஸ்ரு நாட்டைச் சேர்ந்த காரீ மூன்றாவது இடத்தையும் , ஈரான் நாட்டைச் சேர்ந்த காரீ நான்காவது இடத்தையும் , புருனையைச் சார்ந்த காரீ ஐந்தாம் இட்ததையும் பெற்றுக் கொண்டார்கள் . பெண்களில் மலேசியாவைச் சார்ந்த காரீயா முதலிடத்தையும் , இந்தோனேசியாவைச் சார்ந்...