சித்தார் கோட்டையில் அஜ்மீர் நாயகம் மௌலிது ஷரீஃப் மிகச் சிறப்பாக நடைபெற்றது !!!

முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!! பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14-04-2016 நேற்று சித்தார் கோட்டை ஜாமிஆ மஸ்ஜித் ஜன்னத்துல் ஃபிர்தௌஸில், அஜ்மீர் நாயகம் மௌலிது ஷரீஃப் மிகச்சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.. சித்தார் கோட்டையில் அஜ்மீர் நாயகம் மௌலிது ஷரீஃபை, ஒவ்வொரு வருடமும் சமுதாய ஒளி விளக்கு வள்ளல் அல்ஹாஜ் மர்ஹூம் சீ.தஸ்தகீர் சாஹிப் அவர்கள்தான் நடத்துவார்கள். நேற்று அஜ்மீர் நாயகம் மௌலிது ஷரீஃப் ஓதி,மறைந்த சமுதாய ஒளி விளக்கு வள்ளல் அல்ஹாஜ் மர்ஹூம் சீ.தஸ்தகீர் சாஹிப் அவர்களுக்கு துஆச்செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.