ஏர்வாடி நகரில் நடைபெறும் புனித கொடியேற்றும் நிகழ்வு !!!
ஏர்வாடி நகரில் நடைபெறும் இந்த புனித கொடியேற்றும் நிகழ்வு, புனித மதினாவின் அரசராக இருந்த, ஹழ்ரத் சுல்தான் சையது இப்ராஹீம் ஷஹீது பாதுஷா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் கட்டளைப்படி இஸ்லாமிய மார்கத்தை தென்னிந்தியாவில் நிலை நிறுத்த 1198ஆம் ஆண்டு தமிழகம் வந்து, மார்கத்தை ஏற்க மறுத்த அக்கால பாண்டிய மன்னர்களுடன் போரிட்டு, 10 முறை விடாமல் போர் தொடர்ந்து, அப்போரில் 18 வயதே ஆன தன் ஒரே மகன் மற்றும் முக்கிய பல அமைச்சர்களின் உயிரை அல்லாஹ்விற்காக தியாகம் செய்து, பெரும் சிரமத்தின் முடிவில் அவ்வரசர்களை வெற்றி கொண்டு தமிழகத்தின் முதல் இஸ்லாமிய அரசாட்சியை உருவாக்கி அதன் அரசராக ஷஹீது பாதுஷா நாயகம் அவர்கள் பொறுப்பேற்று, பௌத்திரமாணிக்கபட்டணம் (இன்றைய ஏர்வாடி சுற்று பகுதி) கோட்டையில் பாண்டிய மீன் கொடி இறக்கி, தீன்_கொடி ஏற்றிய 855ஆம் ஆண்டு அடையாளம் ஆகும். தென்னகத்தில் இஸ்லாமிய அரசாங்கம் நிறுவப்பட்டது நமக்கு மகிழ்வான நிகழ்வாகும். அதை நினைவூட்டவே வருடந்தோறும் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது. இதை விமர்சிக்கும் முர்ததீன்களுக்கு இது கவலைக்குரிய விஷயமா...