கோலாலம்பூரில் பனைக்குளம் செய்யிது முஹம்மது ஆலிம் அவர்களுக்கு குர்ஆன் ஓதி துஆச்செய்யப்பட்டது !!!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) கோலாலம்பூர்,செலாயாங் மதரஸா இமாம் கஜ்ஜாலியில் 06-07-2018 அன்று இரவு வலமை போல் கஸீதத்துல் புர்தா ஷரீஃப் மஜ்லிஸ் நடைபெற்றது. புனிதம் வாய்ந்த புர்தா ஷரீஃப் மஜ்லிஸை தொடர்ந்து, பனைக்குளம் மஹான் பாவாவின் 52 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு,பனைக்குளம் மஹான் பாபா ஷைகுனா செய்யிது முஹம்மது ஆலிம் ஹழ்ரத் கிப்லா அவர்களுக்கு குர்ஆன் ஓதி துஆச்செய்யப்பட்டது. ஆரம்பமாக ஹத்தமுல் குர்ஆன் துஆவை மௌலவி மு.முஹம்மது ஹனீமத்துல்லாஹ் மன்பயீ ஓதினார்கள். மஜ்லிஸின் இறுதியாக,பனைக்குளம் மஹான் பாவாவின் சிறப்புகளை சொல்லி, செலாயாங் மதரஸா இமாம் கஜ்ஜாலியின் ஆசிரியர் மௌலானா அல்ஹாஃபிழ் ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹிஅவர்கள் சிறப்பு துஆ ஓதினார்கள். இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் ஏராளமான ஸாலிஹீன்கள் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுக்கொண்டனர்.வஸ்ஸலாம்.