முதல் மீலாது மாநாடு !!!
இந்த உலகில் புகழ் பெற்று விளங்கியவர்கள் எல்லாம் புகழோடு பிறந்தார்களா? என்றால் இல்லை எனலாம். ஆனால் அகிலம் சிறக்க வந்த அண்ணலம்பெருமானார் ஸல் அவர்கள் நல்ல பெயரோடும் புகழோடும் பிறந்தார்கள் என்பது மாத்திரமல்ல, பிறப்பதற்கு முன்பும் நல்ல புகழ் பெற்றிருந்தார்கள். நபி ஸல் அவர்களின் வருகை குறித்து எல்லா வேதங்களிலும் முன்னறிவிப்பு செய்யப்பட்டிருந்த படியால் நபிகளாரின் வருகையை உலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தது. வேதக்காரர்கள் நபி பிறப்பதற்கு முன்பே அவர்களை தங்களுக்கு சொந்தம் கொண்டாடத் தொடங்கினர். وَكَانُوا مِنْ قَبْلُ يَسْتَفْتِحُونَ عَلَى الَّذِينَ كَفَرُوا தங்களுக்கு நெருக்கடியான தருணங்களில் அந்த நபியின் பொருட்டினால் தங்களுக்கு வெற்றி கிடைக்க அல்லாஹ்விடம் தேடிக்கொண்டிருந்தனர். அல்குர்ஆன் 2 89 பொதுவாக,பிறந்த நாள் விழா என்பது, பிறந்த பிறகு எடுப்பது தான் வழக்கம். ஆனால் ஜெனிப்பதற்கு முன்பே ஜனன விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது, கண்மனி நாயகம் காதமுன் நபிய்யீன் [ஸல்] அவர்களுக்கு மட்டும் தான். அதுவும் ஆலமுல் அர்வாஹில் – ஆத்ம உலகில் வைத்து அகிலம் தோன்றுவதற்கு முன்னர் அண்ணல் நபி நாயகம்...