சேது நாட்டின் தீன் முத்து சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின் 47 வது நினைவு தினம் சிறப்பாக நடந்து முடிந்தது
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!! அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) '' சூஃபி ஹழ்ரத் '' என்றும் '' சேது நாட்டின் தீன் முத்து '' என்றும் புகழ்பெற்ற சித்தார் கோட்டை பெரிய ஆலிம் ஷாஹிப் அவர்களின் 47 வது நினைவு தினம். மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ். இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸ் 28-09-2014 ஞாயிற்றுக் கிழமை சித்தார் கோட்டை சின்னப் பள்ளிவாசலில்,நடைபெற்றது.அன்றைய தினம் மஃரிப் தொழுகைக்குப்பின், பெரிய ஆலிம் சாஹிப் அவர்களுக்கு குர்ஆன் ஷரீஃப் ஓதப் பட்டு, கண்ணியமிகு உலமாப் பெருமக்களால், ஷாதலியா தரீக்காவின் திக்ரு மஜ்லிஸும் நடத்தப்பட்டது. பின்பு சித்தார் கோட்டை,தெக்குவாடி,முன்னால் மதரஸா மதீனத்துல் உலூம் முதல்வர், ஆலிம் கவிஞர். மௌலானா மௌலவி அல்ஹாஜ் A.ஹாஜா முஹ்யித்தீன் காதிரி ஆலிம் B.A.ஹஜ்ரத் அவர்கள் சிறப்பு பயான் செய்து, இறுதியில் சிறப்பு துஆச் செய்தார்கள். நிகச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் விஷேச உணவுகள் வழங்கப்பட...