சேலம் மழாஹிருல் உலூம் அரபு கல்லூரி முன்னாள் பேராசிரியர் சித்தயன் கோட்டை,மௌலானா மௌலவி அல்ஹாஜ் N.ஷாஹுல் ஹமீத் பாகவி ஹழ்ரத் அவர்கள் மறைவு !!!
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சேலம் மழாஹிருல் உலூம் அரபு கல்லூரி முன்னாள் பேராசிரியர் சித்தயன் கோட்டை,மௌலானா மௌலவி அல்ஹாஜ் N.ஷாஹுல் ஹமீத் ஹழ்ரத் பாகவி என்ற சீனிஹஜ்ரத் அவர்கள் திண்டுக்கல்லில் 23-12-2013 மாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா தொழுகை ,24-12-2013 செவ்வாய்க்கிழமை லுஹர் தொழுகைக்குப்பின் திண்டுக்கல் N.G.O.காலணி ஹவ்வா மஸ்ஜித் கபரஸ்தானில் நடைபெற்றது. 10 நாட்களுக்கு முன்புவரை இவர்களை எனக்கு அறிமுகமில்லை. 18-12-13 புதன்கிழமை அன்று P.S.P ஹழ்ரத் அவர்களின் வகுப்பு என் பள்ளியில் நடப்பது அறிந்து என் பள்ளிக்கு வந்தார்கள். ஹழ்ரத் அவர்களின் வகுப்பில் 2 மணி நேரம் முழுமையாக ஒரு மாணவனைப்போல் அமர்ந்திருந்தார்கள். வகுப்பு முடிந்து அனைவரும் சென்றுவிட்ட பின்னரும்,ஹழ்ரத் அவர்களின் கட்டிலில் படுத்திருந்து 1:30 மணிக்கு லுஹர் தொழுத பின்னரே சென்றார்கள். அப்போதுதான் தான் சேலம் மழாஹிருல் உலூமில் 40 வருடங்கள் பேராசிரியராக பணியாற்றியதை சொன்னார்கள். பிறகு பாக்கியாத்தின் வ...