கணக்கெடுக்கும் மந்திரிகள் தர்கா !!!
#ஏர்வாடி ஷரீஃப் #காட்டுப்பள்ளி தெற்கு நுழைவாயில் நேரே உள்ள தர்காவில் அடக்கமாகி இருக்கும் (#காதர்_மந்திரி, #முஹைதீன்_ மந்திரி என அழைக்கப்படும்) ஹழ்ரத் ஸையிதினா அப்துல் காதர் முஜாஹித் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு, ஹழ்ரத் ஸையிதினா கழன்ஃபர் முஹ்யித்தீன் ஷஹீது ரலியல்லாஹு அன்ஹு ஆகிய இருவரும் #பாதுஷா_நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் #மதீனா மாநகரின் ஆட்சிப் பொறுப்பில் அரசராக இருந்த போது அவர்களின் அமைச்சரவையில் தலைமை மந்திரிகளாக இருந்தவர்கள். பாதுஷாவின் இந்தியப் பயணத்திற்கு உடமைகள், படைகள், பொருட்கள் என அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இறுதி வரை #ஷஹீது_நாயகம் அவர்களுடனேயே பயணித்து, அனைத்து ஏற்பாடு பொறுப்புகளையும் நிறைவேற்றியவர்கள். தென்தமிழக போரில், முதல் போரில் முதல் நாளில், அமைச்சர்களில் முதலானவராக ஷஹாதத் அடைந்து (இன்னுயிர் நீத்து) ஷஹீதானவர்கள் ஹழ்ரத் அப்துல் காதர் ஷஹீத் ரலி.. ஆவார்கள். முஹைத்தீன் ஷஹீத் அவர்களுக்கு போரில் வயிற்றுப்...