மலேசியாவில் நடைபெற்ற 58 ஆம் ஆண்டு தேசிய அளவிலான திருக்குர்ஆன் ஓதும் போட்டி !!!
முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், மலேசியாவில் 58 ஆம் ஆண்டு,தேசிய அளவிலான திருக்குர்ஆன் ஓதும் போட்டி, சென்ற ஏப்ரல் 20-04-2015 முதல் 25-04-2015 வரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ். இதில் ஆண்கள் பிரிவில் கிளந்தான் மாநிலத்தைச்சேர்ந்த, உஸ்தாத் அய்னுதீன் பின் அப்துலாஹ் முதல் நிலை வெற்றியாளராகவும்,பெண்கள் பிரிவில் பாஹாங் மாநிலத்தைச் சேர்ந்த, சித்தி ஹுஸ்னா ஹாஸன் அவர்களும் வெற்றியாளர்களாக தேர்வு பெற்றனர்.முதல் பரிசாக ஒரு லட்சம் மதிப்புள்ள கார்,30 ஆயிரம் ரொக்கம், புனித ஹஜ் பேக்கேஜ்,சான்றிதழ்கள் ஆகியவை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இதில் தேர்வு பெற்றவர்கள், இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஜூன் மாதம் 9 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதிவரை தலைநகர் புத்ரா வாணிப மையத்தில் நடைபெறும் உலகலாவிய திருக்குர்ஆன் போட்டியில், மலேசியாவை பிரதிநித்து கலந்து கொள்வார்கள்.வஸ்ஸலாம்.