இராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் மண்டபம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் ஆலிம்கள் & ஜமாஅத் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் !!!
சமுதாயத்தின் முதுகெழும்பான ஆலிம்களும் ஜமாஅத் நிர்வாகிகளும் இணைந்து தத்தமது குறைநிறைகளை எடுத்துரைத்து சீர்செய்து கொள்வதற்காக கலந்தாய்வுக் கூட்டம் வருடத்திற்கு ஒருமுறை நடத்துவது வழக்கம். அதன்படி 27.02.2018 செவ்வாய்க் கிழமை காலை மணி 10:30 க்கு மண்டபம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லவி அஹமது அமீன் ஆலிம் தலைமையில் மண்டபம் வட்டார ஆலிம்கள் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் (உலமா & உமாரக்கள்) கலந்தாய்வுக் கூட்டம் வேதாளை தெற்குத் தெரு முஹைதீன் பள்ளிவாசலில் நடைபெற்றது. வேதாளை ஜமாஅத் நிர்வாகிகளான ஜனாப் செய்யது அப்துல் ரகுமான், ஜனாப் முஜிபு ரகுமான், ஜனாப் சேக் அப்துல் காதர், ஜனாப் அப்பாஸ் அலி, ஜனாப் காசிம் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகிக்க பள்ளியின் இமாம் மவ்லவி நிஸ்தார் கான் ஆலிம் கிராஅத் ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார். மவ்லவி ஜலால் இப்ராஹீம் ஆலிம் வரவேற்புரை ஆற்ற மவ்லவி ரஹ்மத்துல்லாஹ் ஆலிம் துவக்க உரை ஆற்றினார்கள். இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவி அஹமது இப்ராஹீம் ஆலிம், செயலாளர் மவ்லவி முஹம்மது ஜலாலுத்தீன் ஆலிம், பொருளாலர் மவ்லவி முஹம்மது சாஹிப் ஆலிம் ,...