காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு !!!
குராசானைச் சேர்ந்த ஸீஸ்தானில் ஹிஜ்ரி 530 ரஜப் பிறை பதினான்கில் அதாவது கி.பி. 28-04-1116 இல் ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்தார்கள். அவர்களின் தந்தையின் பெயர் காஜா ஸையிது கியாஸுத்தீன் ஹஸன், தாயாரின் பெயர் ஸையிதா மாஹினூர் என்பதாகும். ஹழ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை போலவே இவர்களும் தந்தை வழியில் ஹஸனி என்றும், தாயார் வழியில் ஹுஸைனி என்றும் சொல்லப்படுகிறது. உள்ளூர் மதரஸாவில் திருக்குர்ஆன், ஹதீஸ் பாடங்களை சிறுவயதிலேயே கற்ற அவர்கள் தம் ஒன்பதாம் வயதிலேயே திருக் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து ஹாபிள் ஆகிவிட்டார்கள். ஹிஜ்ரி 550 வரை புகாரா, சமர்கந்தில் தங்கிய ஹழ்ரத் அவர்கள் மௌலானா ஹுஸாமுத்தீன் ரலியல்லாஹு அன்ஹு, ஷரபுத்தீன் ரலியல்லாஹு அன்ஹு, ஷரபுல் இஸ்லாம் ரலியல்லாஹு அன்ஹு போன்ற பெரியார்களிடம் திருக்குர்ஆன் வியாக்கினம், ஹதீஸ், பிக்ஹு ஆகிய மார்க்க ஞானக் கலைகளை கற்றார்கள். இதன் பின் கிவா, தூஸ் போன்ற நாகரிகமிக்க பட்டணங்களுக்கும் சென்று பெரியார்களை சந்தித்து விட்டு பக்தாதை நோக்கி பயணமானார்கள். பக்தாதை விட்டு நீங்கிய ஹழ்ரத் ...