ஸலாத்துல் ஈதைன் – இரு பெருநாள் தொழுகைகள்-Eid Prayers பெருநாள் தொழுகை (ஹனபி)
ஜும்ஆத் தொழுகை யார் யார் மீது எல்லாம் கடமையாகிறதோ இரு ஈது பெருநாள் தொழுகைகளும் அவர்கள் மீது கடமையாகிறது. ஆனால் ஈது தொழுகை வாஜிபு ஆகும். இம்மாதிரியே ஜும்ஆவில் குத்பா பர்ளு, ஆனால் ஈதில் குத்பா வாஜிபாகும். ஜும்ஆவில் குத்பா தொழுகைக்கு முன்னால் ஓதப்படும். ஈதுகளின் குத்பா தொழுகைக்குப் பின்னால் ஓதப்படும். பெருநாள் தொழுகையின் நேரமாவது சூரியன் நன்கு உதயமானதிலிருந்து (காலை 7 மணியிலிருந்து) நடுப்பகல் உச்ச நேரத்திற்கு சற்று முன் (11 மணி) வரையிலாகும். ஈதுல் பித்ரைவிட ஈதுல் அல்ஹாவைச் சீக்கிரம் தொழுது கொள்வது நல்லது. தொழுகை முறை: ஈது பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத் வாஜிபாகும். ஒவ்வொரு ரக்அத்திலும் மும்மூன்று விகிதம் இரண்டு ரக்அத்துகளில் 6 அதிகப்படியான தக்பீர்கள் உண்டு. முதலில் நிய்யத்து செய்து அல்லா{ஹ அக்பர் சொல்லி இமாமுடன் ரக்அத் கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஃதனா ஓத வேண்டும். பிறகு இரண்டு முறை 'அல்லா{ஹ அக்பர்' என்று கையை உயர்த்தி கீழே தொங்கவிட்டு விட்டு மூன்றாம் முறை 'அல்லாஹ அக்பர்' சொல்லி (ரக்அத்தில் கை கட்டி கொள்ள வேண்டும்) வழக்கம் போல் இமாம் அல்ஹம்து ஸூராவும் கிராஅத்தும் ஓ...