சித்தார் கோட்டையில் நடைபெற்ற மாபெரும் திக்ரு மற்றும் சிறப்பு துஆ மஜ்லிஸ் !!!
அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் 19:02:2018 திங்ககிழமை அன்று சித்தார் கோட்டை ஜும்ஆப் பள்ளிவாசலில் மஃரிப் தொழுகைக்கு பின் சங்கையான ஸலவாத்துன் நாரிய்யா மஜ்லிஸ் மற்றும் ஊரின் முசீபத்துகள் நீங்கவும் வரட்சிகள் நீங்கவும் சிறப்பு துஆ மஜ்லிஸ் நடைபெற்றது. இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் வீரசோழன் ஜாமிஆ கைராத்துல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் முதல்வரும், ஷாதுலியா தரீக்காவின் கலிஃபாவுமான எங்களது ஆசிரியர் பெருந்தகை மௌலானா மௌலவி ஆஷிக்குர் ரஸூல் O.M.அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் கிப்லா அவர்கள் வருகை தந்து சிறப்பு துஆச் செய்தார்கள். இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் நற்பாக்கியம் பெற்ற ஏராளமான நல்லடியார்கள் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுக் கொண்டார்கள்.வஸ்ஸலாம்.