முனைவர் பட்டம் பெற்ற எங்கள் ஆசானுக்கு இதயமார்ந்த வாழ்த்துகள் !!!
ஆண்டுதோறும் ஜமாலிகள் வெளியானாலும், அவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தாலும், ஜமாலி என்னும் நட்சத்திரக் கூட்டங்களிடையே இலங்கும் பௌர்ணமியாய் துலங்கும் எங்கள் உஸ்தாதே ! முனைவர் பட்டம் பெற்ற உங்களால் அல்லவா பட்டம் தனக்கு கிரீடம் சூட்டுகிறது. சுன்னத் வல் ஜமா அத்தின் நூற்றாண்டு கண்ட பாரம்பரியமிக்க தாருல் உலூம் ஜமாலியா அரபிக்கல்லூரியில் தெளிவுறக் கற்று, ஜமாலி என்னும் பட்டம் பெற்று, அங்கேயே ஆசிரியராய் பொறுப்பேற்று, பல நூறு ஆலிம்களை உருவாக்கி, சமூகத்தில் தன் கொள்கை சாம்ராஜ்ஜியத்தின் விதைகளைத் தூவி, பல விருட்சங்களைக்கண்டு, விழுதுகள் பல ஊன்றி, சப்தமில்லாமல் பல சாதனைகளை சாதித்து வரும் மாபெரும் சகாப்தம் *ஜமாலி உஸ்தாத்* தமிழகத்தில் மார்க்கத்தின் பெயரால் மூர்க்கம் செய்து வந்த வஹ்ஹாபியர்களின் மூக்கணாங்கயிற்றைப் பிடித்து கட்டியவர் நீங்கள். குர்ஆன் ஹதீஸ் என்ற பெயரில் சமூகத்தில் உளரி உலவி வந்தவர்களின் அடிசுவட்டை அழித்தவர்கள். அவர்களின் முகவரிகளை ஒழித்தவர்கள் நீங்கள்! தன்னை யாரும் விவாத களத்தில் சந்திக்க முடியாது என்று தலைக்கனம் கொண்டு அலைந்தவர்களின் செருக்கை தகர்த்த...