தராவீஹ் தொழுகையின் சிறப்புகள் !!!
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். நஹ்மதுஹு வநுஸல்லி அலா ரசூலிஹில் கரீம்.* புனித ரமலானில் ஒவ்வொரு நாளும் நோன்பாளிகள் தராவீஹ் தொழுவதால் கிடைக்கும் நன்மைகள் :* *முதலாம் தராவீஹ் தொழுதவர்...* *அன்று பிறந்தப் பாலகனைப் போல் ஆகிவிடுகிறார்.* *2 ம் நாள் தொழுதவருக்கு...* *அவரின் பெற்றோரின் பாவமும், அவரின் பாவமும் மன்னிக்கப் படுகின்றன.* *3 ம் நாள் தொழுதவருக்கு...* *அர்ஷை சுமக்கும் மலக்குமார்கள் பாவ மன்னிப்புக் கேட்கிறார்கள்.* *4 ம் நாள் தொழுதவருக்கு...* *தவ்ராத்,ஜபூர், இன்ஜீல், குர்ஆன் ஓதிய நன்மைகள் வழங்கப்படுகின்றன.* *5 ம் நாள் தொழுதவருக்கு...* *புனித கஃபாவிலும், மஸ்ஜித் நவபி, மஸ்ஜிதுல் அக்ஸாவிலும்,தொழுத நன்மைகள் கிடைக்கும்.* *6 ம் நாள் தொழுதவருக்கு...* *பைத்துல் மஃமூரை தவாப் செய்த நன்மையும், அவருக்காக அனைத்து வஸ்துகளும் பிழை பொறுக்கத் தேடுகின்றன.* *7 ம் நாள் தொழுதவருக்கு...* *ஹள்ரத் நபி மூஸா* *(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் சிறப்பு வழங்கப்படுகிறது.* *8 ம் நாள் தொழுதவ...