நிஸ்பு ஷஃபானின் அமல்களும், துஆவும்-Amal and Dua of Nishfu Sahban
'ஷஃபான் மாதம் என்னுடையது' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஷஃபான் மாதம் 15 ம் நாளைத்தான் நிஸ்பு ஷஃபான் என்று அழைக்கிறார்கள். இந்த இரவில்தான் வரும் சென்ற வருடத்தின் அமல்களின் கணக்குகள் முடிவுக்கு வந்து இந்த வருடத்திற்குள்ள புதிய கணக்கு (அமல் நாமா)இறைவனால் நிர்ணயிக்கப்படுவதாகவும், இவ்வருடத்திற்குள்ள இறப்பு, பிறப்புகள் எழுதப்படுவதாகவும் கிரந்தங்களில் கூறப்பட்டுள்ளன. ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், 'மனிதர்களே! ஷஃபான் மாதம் 15வது இரவு வணக்கங்களில் ஈடுபடுங்கள், நோன்பும் நோற்குங்கள். இந்த புனித இரவில் அல்லாஹ் தனது கிருபையை ரஹ்மத்தை பூமியை நோக்கி பரவச் செய்து, 'யாராவது நோயாளிகள் இருக்கிறார்களா? அவர்களின் நோயை நான் குணப்படுத்துகிறேன் என்று அழைக்கிறான். மற்றும் இந்த இரவு முழுவதும் கேட்பவர்களுக்கு அவர்களின் தேவைக்கு ஏற்ப கொடுக்கிறான்.' (இப்னு மாஜா) மேலும் இந்த இரவில் அல்லாஹ்வின் ஆசீர்வாதம் மற்றும் பாமன்னிப்பின் வாயல்கள் திறந்து இருக்கின்றன. அல்லாஹ் இந்த இரவில் பாவமன்னிப்புக் கேட்பவரின் பாவங்களை மன்னிக்கிறான். இறுதிய...