ஜமாலி எனும் பேராளுமை !!!
மணம்சூழ் மல்லிப்பட்டிணத்தில் மங்கலமான நேரமதில் 03-06-1960 ல் மாண்பான தம்பதியாம் முஹம்மது மஜீத், ரஹ்மத்துல் குப்ரா (அல்லாஹ் இவர்களை பொருந்திக் கொள்வானாக!) விற்கு மைந்தராக பிறந்தவர் தமிழகம் தந்த தனியொருவர் தன்னடக்கத்தில் தன்னிகரில்லாதவர் புதிய பயணம் எனும் ஹழ்ரத் அவர்களின் மாதஇதழின் வழியே அகீதாவை கற்றோர் ஆயிரமாயிரம். ஆதாரங்கள் அடுக்கப்பட்ட ஆய்வு கட்டுரைகளால் அது நிரம்பி வளிந்தது எழுத்தெனும் ஆயுதங்களை ஏந்தியும் பேச்செனும் தற்காப்பு கலைகளை சூடியும் வஹ்ஹாபிகளுக்கு எதிரான போர்களத்தில் புகுந்து புகழாரம் பெற்றவர் இன்றும் சுன்னத் வல் ஜமாஅத்தின் தலைப்புக்களில் தேடுகையில் தனியாக இணையத்தில் வந்து குவிவது ஹழ்ரதவர்களின் பதிவுகளே அரபி பாண்டித்துவத்தின் அசுர திறமையினை ஹழ்ரத் அவர்களிடம் மண்டியிட்டு ஓதிய மாணவர்களிடம் கேட்கலாம். எவரும் தொடுவதற்கு துணியாத தலைப்புக்களான வஸீலா, இஸ்திகாஸா, மவ்லித் போன்றவற்றையும் பொதுமேடைகளில் புரியும்படி போட்டுடைத்தவர் வாதம் செய்ய வா வா என மாதம் மாதம் கத்திய வம்பர்களையும் ஆதாரங்கள் எனும் வாளால் வாலை வெட்டியவர். வாதிப்போர்களின் வாதங்களை அவர்களின் வடி...