மலேசியாவில் சர்வதேச ஸுன்னத் ஜமாஅத் மார்க்க அறிஞர்களின் மாபெரும் மாநாடு நடைபெற்றது !!!
முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், சர்வதேச ஸுன்னத் ஜமாஅத் மார்க்க அறிஞர்களின் மாநாடு மலேசியாவில் புத்ரா ஜெயா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், மே மாதம் 06-05-2015 ஆம் தேதி முதல் 08-05-2015 ஆம் தேதி வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ். . . உலகில் பல நாடுகளில் இருந்து ஏராளமான இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், புத்திஜீவிகள் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து,புனித கஃபாவின் உட்பகுதிக்கு சென்று வந்த பாக்கியசாலி,காந்தபுரம்,கமருல் உலமா,அல்லாமா அஷ்ஷைகு A.P.அபூபக்கர் முஸ்லியார் பாக்கவி ஹஜ்ரத் அவர்களும் கலந்து உரையாற்றினார்கள்.வஸ்ஸலாம்.