பத்ரு ஸஹாபாக்களின் திருநாமங்கள் - Ashabul Badriyeen-
அஸ்மாவுல் பத்ரிய்யீன் துஆ பத்ருப் பெரும்போர் இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கிய இடம் பெற்ற ஒன்று. சொர்க்கத்து மாமலர்களான அந்த சுந்தர சஹாபாக்கள் செய்த தியாகம் சாதாரணமானதல்ல. நிகரற்றது. ஈடு இணையற்றது. அந்த அறப்போரில் கலந்து கொண்ட அந்த ஸஹாபிகளின் தியாக ரத்தத்தால் இந்த சன்மார்க்கம் உரம் பெற்றது. உயிர் பெற்றது. அந்த உன்னத ஸஹாபாப் பெருமக்களின் திருநாமங்கள் பலரின் விலாயத்துக்குக் காரணமாக இருந்திருக்கின்றன. பல பெருமக்களின் ஆன்மீக பலத்துக்கும் பக்குவத்திற்கும் பக்க துணையாக இருந்திருக்கின்றன. அந்தப் புனித திருநாமங்களைக் கொண்ட இந்த துஆ சிறப்பான ஒன்று. இது கேரளத்திலும் தமிழகத்திலும் அறியப்பட்ட பிரபலமான இஸ்லாமிய கலைஞானக் கடலாக விளங்கியவரும் ஆன்மீகப் பெருமேதையுமான மகான் ஷிஹாபுத்தீன் அபுஸ்ஸஆதாத் அஹ்மத் கோயா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களால் கோர்வை செய்யப்பட்டதாகும். ஹிஜ்ரி 1302 ஜமாஅத்துல் ஆகிர் பிறை 22ல் பிறந்த இம்மகானவர்கள், ஹிஜ்ரி 1374 முஹர்ரம் பிறை 24ல் வபாத்தாகி, கோழிக்கோடுக்கு அருகில் உள்ள சாலியம் என்னும் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இம்மகானவர்கள் அரபியில...