புனிதம் நிறைந்த ரமலான் மாதம்
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் நல் அடியார்களே ! சங்கையான , புனிதம் நிறைந்த மாதத்தை நாம் அடைந்திருக்கிறோம். அல்ஹம்து லில்லாஹ். இம் மாதத்தில் நாம் அதிகமான நல் அமல்கள் செய்ய வேண்டும் .1- இமாம் ஜமாஅத்துடன் ஐங்காலத் தொழுகைகளை, தக்பீர் தஹ்ரீமாவுடன் தொழ வேண்டும் . 2- குர்ஆன் ஷரீஃப் அதிகமாக ஓத வேண்டும் . 3- 20- ரகஅத்துகள் முழுமையாக தராவீஹ் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் . 4- இந்த வருடத்தின் ரமலான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன், என்று நிய்யத் வைத்து நோன்பு வைக்க வேண்டும் . 5- தொலைக்காட்சி அறவே பார்க்கக்கூடாது . 6- பரக்கத்தான ஸஹர் உணவை சாப்பிட்டு நோன்பு வைக்க வேண்டும் .மேலும் சஹர் நேரத்தில் தொலைக்காட்சி பார்க்கவே கூடாது 7- அல்லாஹ்விடத்தில் துஆச் செய்த பிறகே நோன்பு திறக்க வேண்டும் . 8- ஷரீஅத் முறைப்படி எந்தெந்த பொருட்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமோ அத்தகய பொருட்களை கணக்கிட்டு தனது குடும்பத்தில் உள்ள ஏழை எளியவர்கள் , அல்லது தனத...