சித்தாரிய்யா அரபுக் கல்லூரி உருவான விதம்
இந்தியாவின் தென் தமிழகத்தில் இஸ்லாமிய தொண்டை சுமார் 800 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்றுதொட்டு செய்து வருவது நமது இராமநாதபுரம் மாவட்டம் தான். ஏர்வாடி அல்குத்பு ஷஹீது இபுராஹிம் பாதுஷா நாயகம் முதல், இன்றும் என்றும் யாராகினும் சிலரோ பலரோ இறை பணியை செய்து கொண்டே இருப்பார்கள். அவ்வகையில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழகத்தின் தாயிக்கெல்லாம் தாய் மதரஸா கீழக்கரை அரூஸியா தைக்கா போன்று இறை பணியை தொடங்கியுள்ள நமது சீர்மிகு சித்தார்கோட்டை சித்தாரிய்யா அரபிக்கல்லூரியும் கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக ஐந்தாண்டுகளில் மௌலவி பட்டம் வழங்கி சீரோடும் சிறப்போடும் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இக்கல்லூரி கி.பி.2001 ஆம் ஆண்டு முஹம்மது இபுராஹிம் - சவ்தாம்மாள் தம்பதியினரின் மகனார் மௌலானா மௌலவி அல்ஹாஜ் இ.சையிது முஹம்மது புஹாரி ஆலிம் ஃபாஜில் மன்பயீ அவர்களால் சித்தார்கோட்டையில் துவக்கப்பட்டு அவர்களால் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. இப்பெருமகனார் தொண்டி, அம்மாபட்டிணம், பனைக்குளம் போன்ற ஊர்களிலுள்ள அரபுக் கல்லூரிகளில் முதல்வராக சிறப்பான முறையில் பணியாற்றி சிறந்த மார்க்க முத்துக்களை உருவாக்கினார்கள். ...