ஷவ்வால் மாத ஆறு நோன்புகள்-Shawwal Six Fasting
நோன்பு என்பது ஒரு வகை வணக்கமாகும். நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமலான் மாத கடமையான நோன்புகளை நோற்பதோடு மட்டுமல்லாமல், கீழ்கண்ட தினங்களிலும் உபரியாக நோன்பு நோற்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். அதை நமது இமாம்கள் சுன்னத்தான நோன்பாக நமக்கு ஆக்கித் தந்திருக்கிறார்கள். 01. ஷவ்வால் மாத ஆறு நோன்புகள். 02. பிரதி திங்கள், வியாழக் கிழமைகள் நோன்பு வைப்பது சுன்னத்து முஅக்கதாவாகும். 03. ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள். அவை அய்யாமுல் பீழ் என்ற வெள்ளை நாட்களாகும்.அதாவது மாதத்தின் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்கள் மற்றும் ஒவ்வொரு மாதத்திலும் பிறை 27, 28, 29 ஆகிய மூன்று இரவு இருளான (அய்யாமுஸ்ஸூத்) என்ற நாட்களிலும் நோன்பு வைப்பது சுன்னத்தாகும். துல்ஹஜ் மாதம் பதிமூன்றுக்குப் பதிலாக பதினாறில் நோன்பு வைக்க வேண்டும். 04. ஆஷுரா நாள்: முஹர்ரம் பத்தாம் நாள். மேலும் அதற்கு ஒரு நாள் முந்தி அல்லது ஒரு நாள் பிந்தி சேர்த்து வைப்பது சுன்னத்தாகும். 05. அரபா நாள்: துல்ஹஜ் மாதம் 9 ஆம் நாள். ரஜப், ஷஃபான் மாதங்கள் நோன்பு நோற்பது ஏற்றமானதாகும். களாவான ஃபர்ளான நோன்பு நோற்கும்போது சுன்னத்த...