மாநில ஜமாஅத்துல் உலமா சபை நன்றி !!!
பெருநாள் மற்றும் நோன்புபிறை பற்றிய அறிவிப்பை வெளியிட தமிழக அரசு குழுவொன்று நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினர் எழுப்பிய போது முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை காஜியின் அறிவிப்பே இறுதியானது என்ற கருத்தை வலியுறுத்தியதற்கு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவி அபுபக்கர் எம் எல் ஏ வுக்கு தொலைபேசியில் பாராட்டு தெரிவித்தார்கள். தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்க தலைமை காஜியின் அறிவிப்பை ஏற்பதே சரியானது என்ற ஜமாஅத்துல் உலமாவின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் வலியுறுத்தியதற்கு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள்.