தமிழ் பேசும் உலகின் முதலாவது அரபு மதரஸா !!!
தமிழ் பேசும் உலகின் முதலாவது அரபு மதரஸா தென் இந்தியா தமிழ்நாடு கீழக்கரை அரூஸிய்யா மத்ரஸா مدرسة العروسية மறைக்கப்பட்ட வரலாறு தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் வாழ்ந்த தமிழ் முஸ்லிம்கள் தமிழ்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்கள் எவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டதோ அதேபோன்று தான் இஸ்லாத்திற்கு வழங்கிய பங்களிப்புக்களும் மூடிமறைக்கப்பட்டுள்ளன. போர்த்துக்கேயரின் வருகையின் பின்னர் தமிழ் முஸ்லிம்களுக்கிடையில் பாரிய சமூக சமயப் புணர் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனை செவ்வனே நிறைவேற்றிய அறிஞராக செய்ஹ் ஸதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூல்லாஹ் (ஸதகதுல்லாஹ் அப்பா) வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறார்கள். முகலாய மன்னர் அவுரங்கஸீப் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய செய்ஹ் ஸதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூல்லாஹ் அவர்கள் "பத்வா ஏ ஆலம்கீரி" சட்டவாக்க நூலை தொகுக்கும் குழுவிற்கு பொறுப்பாக இருந்தார்கள். இமாம் அவர்களின் பரிந்துரைக்கு அமைய மன்னர் அவுரங்கஸீப் அவர்கள், சீதக்காதி அவர்களை மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுனராகவும் நியமித்தார்கள். செய்ஹ் ஸதகதுல்லாஹ் காஹிரி றஹிமஹூல்லாஹ்...