புர்தா ஷரீபும் நம் அஃலா ஹலரத்தும் !!!
1919 ம் ஆண்டில் தமிழகத்தில் காலரா போன்றதொரு மிகப்பெரிய நோய் பரவி இருந்தது .. பாக்கியாத் மதரஸாவின் மிகச்சிறந்த உஸ்தாதாக இருந்த முஹத்திஸ் அப்துர் ரஹீம் ஹழரத் அவர்கள் இந்நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு நினைவிழந்து பேசக்கூட முடியாத நிலையில் ஏறக்குறைய மரணப்படுக்கையில் இருந்தார்கள் ... " அப்துர்ரஹீம் ஹழரத் " அவர்கள் நமது அண்ணல் அஃலா ஹலரத் அவர்களது மகளை மணமுடித்தவர்கள் மிகச்சிறந்த முதர்ரிஸ் . ( பின்னால் பாகியாத்தின் முதல்வராக இருந்தவர்கள் . ) நமது அஃலா ஹலரத் அவர்கள் தன் மருமகனுக்கு அருகில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார்கள் .. காலரா நோயிலிருந்து மீளாமல் பலர் மரணித்துக்கொண்டிருந்த நேரம் அது .. ஏனெனில் அந்நோய்க்கு சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நேரம் அது .. அப்போது பெரிய பாடம் ஓதும் மாணவர்களில் சிலர் அஃலா ஹலரத் அவர்களிடம் வந்து "ஹழரத்....... புர்தா ஷரீப் ஓதலாமா".... ? என்று கேட்டார்கள் . ஹழரத் அவர்களும் அதற்கிசைந்து " ஒழுச்செய்து , கிப்லாவை முன்னோக்கி , காலை மடக்கி அத்தஹிய்யாத்தில் அமர்வது போல் உட்கார்ந்து ஒதுங்கள் .அதில் இரண்டு மீம் வருகிற பைத...