புர்தா ஷரீபும் நம் அஃலா ஹலரத்தும் !!!
1919 ம் ஆண்டில் தமிழகத்தில் காலரா போன்றதொரு மிகப்பெரிய நோய் பரவி இருந்தது ..
பாக்கியாத் மதரஸாவின் மிகச்சிறந்த உஸ்தாதாக இருந்த முஹத்திஸ் அப்துர் ரஹீம் ஹழரத் அவர்கள் இந்நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு நினைவிழந்து பேசக்கூட முடியாத நிலையில் ஏறக்குறைய மரணப்படுக்கையில் இருந்தார்கள் ...
" அப்துர்ரஹீம் ஹழரத் " அவர்கள் நமது அண்ணல் அஃலா ஹலரத் அவர்களது மகளை மணமுடித்தவர்கள் மிகச்சிறந்த முதர்ரிஸ் . ( பின்னால் பாகியாத்தின் முதல்வராக இருந்தவர்கள் . )
நமது அஃலா ஹலரத் அவர்கள் தன் மருமகனுக்கு அருகில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார்கள் .. காலரா நோயிலிருந்து மீளாமல் பலர் மரணித்துக்கொண்டிருந்த நேரம் அது .. ஏனெனில் அந்நோய்க்கு சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நேரம் அது ..
அப்போது பெரிய பாடம் ஓதும் மாணவர்களில் சிலர் அஃலா ஹலரத் அவர்களிடம் வந்து "ஹழரத்....... புர்தா ஷரீப் ஓதலாமா".... ? என்று கேட்டார்கள் . ஹழரத் அவர்களும் அதற்கிசைந்து " ஒழுச்செய்து , கிப்லாவை முன்னோக்கி , காலை மடக்கி அத்தஹிய்யாத்தில் அமர்வது போல் உட்கார்ந்து ஒதுங்கள் .அதில் இரண்டு மீம் வருகிற பைத்தை மும்முறை ஓதுங்கள் " என்று கூறினார்கள் .
மாணவர்களும் அவ்வாறே ஓதத்தொடங்கினார்கள் .அஃலா ஹலரத் அவர்களும் அம்மாணவர்களுடன் சேர்ந்து ஓதினார்கள் .
ஒரு முறை ஓதி முடித்தவுடன் இரண்டாம் முறையும் ஓதச்சொன்னார்கள் . மாணவர்கள் ஓதி முடித்தவுடன் மீண்டும் மூன்றாவது முறையும் ஓதச்சொன்னார்கள் .
மாணவர்கள் ஹழரத் அவர்களின் சொல்லிற்கேற்ப மூன்றாவது முறையும் ஓதத்துவங்கினார்கள் .
மாணவர்கள் முதல் பைத்தை ஓதி முடித்த போது திடீரென்று அஃலா ஹழரத் அவர்கள் " ரஸூலுல்லாஹ் வந்து விட்டார்கள் "..... " சிறந்த மருத்துவர் வந்து விட்டார்கள் " .. என்று சப்தமிட்டு கூறியவாறு .. அப்துர்ரஹீம் அவர்களைக்காட்டி "இவரின் நோய் நீங்கி விட்டது .. சீக்கு போய் விட்டது " .... என்று சப்தமிட்ட நிலையில் ரஸூல் ( ஸல் ) அவர்களுக்கு மரியாதை செய்யும் முகமாக எழுந்து நின்று விட்டார்கள் .
அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது .....! நினைவிழந்து .... பேச்சு மூச்சு இல்லாமல் ... மரணப்படுக்கையில் படுத்திருந்த .. அப்துர்ரஹீம் ஹழரத் அவர்கள் " இங்கு என்னப்பா சப்தமிட்டு ஓதிக்கொண்டிருக்கிறீர்கள் . ... காது அடைக்கிறதே " .? என்று கூறியவாறு எழுந்து அமர்ந்தார்கள் .
அவர்களது உடலில் நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லை ....
நமது அண்ணல் அஃலா ஹழரத் அவர்களின் அற்புதங்களில் இதுவும் ஒன்று ...
*பாக்கியாத்திலிருந்து கிளைகளாக உருவாகி கல்வி மணம் பரப்பிக்கொ ண்டிருக்கிற அனைத்து மதரஸாக்களிலும் வியாழக்கிழமை மக்ரிபிற்கு பின் புர்தா ஷரீப் ஓதுவதின் மகத்துவத்தில் இந்த வரலாற்றுச்சம்பவமும் ஒரு காரணம்.
ஆக்கம் : Syed Ahamed Ali Baqavi ஹள்ரத், சென்னை.
Comments
Post a Comment