புனித நாகூரைப்பற்றி !!!
புனித நாகூரைப்பற்றி !!! நாகூர் ;- இப்பெயருடன் கூடிய, ஊர் தஞ்சை மாவட்டத்தின் கடலோரப்பகுதியில் உள்ளது.இங்கு முற்காலத்தில் நாகமரம், ( புன்னை மரம் ) அடர்ந்து வளர்ந்திருந்ததின் காரணமாக,நாகப்பூர் என ஆகிப் பின்னர் நாகூர் என்று மறுவிற்று என்று கூறுவர். இவ்வூரில் அல் குத்புல் மஜீது ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்கள் வந்து 28 ஆண்டுகள் தங்கியிருந்து,சன்மார்க்க சேவை செய்து,அடங்கப்பெற்றிருப்பதின் காரணமாக,இவ்வூர் தனிச்சிறப்புப் பெற்று விளங்குகிறது.நாள்தோறும்,இவர்களின் அடக்கவிடத்திற்கு,மக்கள் தரிசனத்திற்காக வந்து கொண்டுள்ளனர். ஆண்டு தோறும் நிகழ்வுறும் இவர்களின் நினைவுநாள் விழாவிற்கு,மக்கள் நாலா பக்கங்களிலிருந்தும்,வந்து குழுமுகின்றனர். புலவர் கோட்டை என்று பெயர் பெற்ற இவ்வூர்,பல தமிழ் புலவர்களை ஈன்றெடுத்திருக்கிறது.குலாம் காதிறு நாவலரும்,அவரின் மகன் ஆரிஃபு நாவலரும்,இவ்வூரைச் சேர்ந்தவர்களே.சீரியர் செவத்த மரைக்காயர் என்ற புலவரும்,இவ்வூரில் தோன்றியவரே. இன் னும் சில புலவர்களும் இவ்வூரில் தோன்றி வாழ்ந்துள்ளனர்.இவ்வூரில் ஏழு பள்ள...