புனித நாகூர் ஓர் ஆய்வு !!!


புனித நாகூரைப்பற்றி !!!




நாகூர்  ;- இப்பெயருடன் கூடிய, ஊர் தஞ்சை மாவட்டத்தின் கடலோரப்பகுதியில் உள்ளது.இங்கு முற்காலத்தில் நாகமரம், 
( புன்னை மரம் ) அடர்ந்து வளர்ந்திருந்ததின் காரணமாக,நாகப்பூர் 
என ஆகிப் பின்னர் நாகூர் என்று மறுவிற்று என்று கூறுவர்.


இவ்வூரில் அல் குத்புல் மஜீது ஷாஹுல் ஹமீது பாதுஷா 
நாயகம் அவர்கள் வந்து 28 ஆண்டுகள் தங்கியிருந்து,சன்மார்க்க சேவை செய்து,அடங்கப்பெற்றிருப்பதின் காரணமாக,இவ்வூர் 
தனிச்சிறப்புப் பெற்று விளங்குகிறது.நாள்தோறும்,இவர்களின் அடக்கவிடத்திற்கு,மக்கள் தரிசனத்திற்காக வந்து கொண்டுள்ளனர்.
ஆண்டு தோறும் நிகழ்வுறும் இவர்களின் நினைவுநாள் 
விழாவிற்கு,மக்கள் நாலா பக்கங்களிலிருந்தும்,வந்து குழுமுகின்றனர்.


புலவர் கோட்டை என்று  பெயர் பெற்ற இவ்வூர்,பல தமிழ் புலவர்களை ஈன்றெடுத்திருக்கிறது.குலாம் காதிறு நாவலரும்,அவரின் மகன் ஆரிஃபு நாவலரும்,இவ்வூரைச் சேர்ந்தவர்களே.சீரியர் செவத்த மரைக்காயர் என்ற புலவரும்,இவ்வூரில் தோன்றியவரே.இன்னும் சில புலவர்களும் இவ்வூரில் தோன்றி வாழ்ந்துள்ளனர்.இவ்வூரில் ஏழு பள்ளிவாயில்கள் இருக்கின்றன.அவற்றில் பழமையானது.நவாப் மஸ்ஜிது ஆகும்.அது நவாபால்,ஏறத்தாழ ஹிஜ்ரி 1100 ஆம் ஆண்டில் தர்ஹாவின் வடபகுதியில்,கட்டப்பட்டது.


இவ்வூரில் நான்கு மதரஸாக்கள் உள்ளன.
அவையாவன ;-  ( 1 ) கௌதியா அரபுக் கல்லூரி பைத்து சபா 
( 2 ) காதிரிய்யா மதரஸா இதில் 300 கல்வி பயிலுகின்றனர். 
( 3 ) முஹ்யித்தீன் பள்ளி மதரஸா இதில் 200 மாணவர்கள் மார்க்க 
கல்வி பயிலுகின்றனர்.( 4 ) வாலெப்பை மதரஸா.இது அவரது அறக்கட்டளையின் கீழ் நூறு ஆண்டுகளாக இயங்கிவருகிறது.
இவ்வூரில் தோன்றிய மௌலவி அல்ஹாஜ் குலாம் தஸ்தகீர் 
சாஹிப் நானாசாஹிப் அரபியில்  முந்நூருக்கு மேற்பட்ட,புகழ்ப்பாக்கள்.இரங்கற்பாக்கள் ஆகியவற்றை
இயற்றி 1953 இல் காலமானார்.சென்னை  உயர்நீதி  மன்ற நீதிபதி எம்.எம்.இஸ்மாயீல் இவ்வூரில் தோன்றியவரே.



 தொண்டி,பேரறிஞர் மர்ஹூம்,
எம் ஆர் .எம் அப்துர் ரஹீம் ஸாஹிப் அவர்களால்,
1977 ல் வெளியான இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் 
நூலில் வெளிவந்த செய்தியாகும்.வஸ்ஸலாம்.

வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு