பெருநாள் அன்று பேன வேண்டியவை !!!
1.அதிகாலையில் பேரீச்சம் பழம் சாப்பிடுவது. 2.மிஸ்வாக் செய்து வாயைச் சுத்தப் படுத்துதல். 3.ஈது தொழுகைக்காக குளிக்கிறேன் என்ற நிய்யத்துடன் குளித்தல். 4.உணவு உண்டுவிட்டுத் தொழுகைக்கு வருதல். 5.ஆகுமான நல்ல ஆடைகளை அணிதல். 6.நறுமணம் பூசுதல்,சுருமா இடுதல். 7.பெருநாள் தொழுகையை மகிழ்வுடன் நிறைவேற்றுதல், 8.சந்தோசத்துடன் இருத்தல்,சந்தோசத்தை வெளிப்படுத்துதல், 9.முஸாபஹா,முஆனகா செய்து வாழ்த்துக்களைப் பறிமாறிக்கொள்ளுதல். 10.தர்மங்கள் அதிகமாக செய்தல். 11.உறவுகளைச் சந்தித்து அன்பை பறிமாறுதல். 12.அனாதைகள்,ஏழைகள்,நோயாளிகளுக்கு உதவிகள் புரிதல். 13.அல்லாஹ்வின் அன்பும்,நட்பும், நெருக்கமும் தரும் காரியங்களை எப்பொழுதும் செய்தல். 14.பெருநாள் வந்துவிட்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் போவதற்கும் வருவதற்கும் பாதைகளை மாற்றிக்கொள்வார்கள். ஆதாரம் ; புகாரி. வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள்.